வாசகர்கள் கருத்துகள் ( 1 )
போதையில் நம்பர் ஒன்னு மாநிலமாக மாற்றிய இந்தியாவின் நம்பர் ஒன்னு துக்ளக் கோமாளி ....
ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4கோடி மதிப்புள்ள சாரஸ் சென்ற கஞ்சா செடியில் இருந்து எடுக்கப்படும் 25 கிலோபோதை பொருளை குஞ்சார்வலசை கடற்கரை வேலவன் குடியிருப்பில் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கஞ்சா செடியிலிருந்து தயாரிக்கப்படும் சாரஸ் என்ற போதைப் பொருள் 75 கிலோ கடத்த இருப்பதாக தகவல் கிடைத்தது. மண்டபம் குஞ்சார்வலசை வேலவன் குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட போலீசார் கஞ்சா செடி பிசினில் இருந்து தயாரிக்கப்படும் சாரஸ் என்ற 75 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்தனர். போதை பொருளை கடத்தவிருந்த முதுகுளத்தூர் அருகே உள்ள கிடாதிருக்கை போஸ் மகன் நம்பு 37, மண்டபம் அறிய வேதாளையை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பாண்டி 35, ஆகிய இருவரையும் கைது செய்தனர். பிடிபட்ட போதை பொருளின் மதிப்பு ரூபாய் 4 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதையில் நம்பர் ஒன்னு மாநிலமாக மாற்றிய இந்தியாவின் நம்பர் ஒன்னு துக்ளக் கோமாளி ....