உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக ஆசிரியை இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தமிழக ஆசிரியை இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

சென்னை : தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட நாடு முழுதும் 45 பேர் தேர்வாகி உள்ளனர். ஆசிரியராக பணியாற்றி, ஜனாதிபதியாக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளான செப்., 5ம் தேதி, மத்திய அரசு சார்பில், கல்வியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு, தமிழகத்தில் இருவர், புதுச்சேரியில் ஒருவர் உட்பட 45 ஆசிரியர்கள், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில், சென்னை, மயிலாப்பூரில் உள்ள, பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன்; திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள, பாரதியார் நுாற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லியில் நடக்க உள்ள விழாவில் விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ