உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோட்டையனுக்கு ஜெ., ஆன்மா தோல்வியை தரும்; உதயகுமார் சாபம்

செங்கோட்டையனுக்கு ஜெ., ஆன்மா தோல்வியை தரும்; உதயகுமார் சாபம்

மதுரை : ''ஒற்றுமை என்ற பெயரை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என்ற வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதா ஆன்மா தோல்வியைத் தான் தரும்'' என மறைமுகமாக செங்கோட்டையனுக்கு சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் சாபம் விட்டார். அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் பிரிந்தவர்களை 'மறப்போம்; மன்னிப்போம்' என மீண்டும் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்தார். இதனால் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. செங்கோட்டையன் விவகாரம் குறித்து பழனிசாமி கருத்து சொல்லாத நிலையில், சட்டசபையில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்த முடியுமா என முதல்வர் ஸ்டாலினின் பகல் கனவிற்கு சில பேர் இரையாகி 'அங்கே பிரச்னை உள்ளது; பிளவு உள்ளது' என மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற சவால்களை சாதனையாக பொதுச்செயலாளர் பழனிசாமி மாற்றி கொண்டிருப்பதை சிலர் பொறுக்க முடியாமல் அவதுாறு, புரளி, கதை, கட்டுரை, கற்பனைகளை பரப்பினார்கள். அது இன்று புஸ்வாணமாகி போனது. பழனிசாமியின் எழுச்சி பயணத்தை கண்டு சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு இருக்கலாம். அது தங்கள் இயலாமையால் ஏற்படும் பொறாமை. ஒற்றுமை என்ற பெயரை வைத்துக் கொண்டு அ.தி.மு.க., செல்வாக்கிற்கு பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என்று கனவு காணும் வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெ., ஆன்மாவும், மக்களும் தோல்வியைத்தான் தருவார்கள். எழுச்சி பயணத்தை மடைமாற்றம் செய்ய வயிற்று எரிச்சல் மனிதர்கள் 'இங்கே சென்றார்கள், அங்கே சென்றார்கள், அவரை சந்தித்தார்கள், இவரை சந்தித்தார்கள்' என்று செய்தி வருகிறது. ஆனால் அந்த அமித்ஷாவே பழனிசாமி வீட்டில் விருந்து சாப்பிட்டு, 'பழனிசாமி தலைமையில் ஜெ., ஆட்சி மீண்டும் மலரும்' என பறைசாற்றி விட்டு சென்றார். அ.தி.மு.க., மக்கள் இயக்கம். இதை கட்டி காத்து வரும் பழனிசாமிக்கு வாழ்த்துப்பா பாடாவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் அசைத்துப் பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள். 'அவரை மாற்றுவோம் இவரை மாற்றுவோம்' என்று சொல்பவர்களை எல்லாம் மாற்றிவிட்டு பழனிசாமி ஒருவர் தான் முதல்வர் என்று மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

pakalavan
செப் 11, 2025 14:58

ஜெயல்லிதா மருத்துவமனைல இருந்தப்ப தாடி வச்ச, செத்த உடனே தாடிய எடுத்திட்ட, சின்னம்மா முதல்வரா வரனும் என்று சொல்லி விரதம் இருந்த, இப்ப சஸிக்கலா ன்னா யாரு என்று கேக்குற. ஓபிஎஸ் கு ஜால்ரா போட்ட இப்ப ஐகா வாங்கிட்ட,


THANGARAJ P
செப் 11, 2025 14:38

உண்னுடைய தோல்வி CONFIRM.


PR Makudeswaran
செப் 11, 2025 10:37

உங்களில் யார் தான் உத்தமர்.?தலை உள்பட கண்ணை சுற்றுகிறது. கேட்டால் எம் ஜி ஆரை சொல்லிவிடுகிறீர்கள். பாவம் அவர் தலை உருள்கிறது.


sankar
செப் 11, 2025 10:12

அதிமுகவினருக்கும் எல்லோரும் அடிமைங்க தான் செங்கோட்டையனுக்கு இருக்கும் துணிச்சல் ஒருத்தனுக்கு இல்லை எல்லாமே பதவிக்காக ஒட்டி கொண்டிருக்கும் கூட்டம் அம்மாவது சும்மாவது. அம்மா கொண்டு வந்த பனீரை மாற்றி சசிகலாவை கொண்டு வந்த போதே நீங்கள் எல்லாம் அம்மா விசுவாசி என்பதை இழந்து திடீர் இன்றுவரை மனோஜ் பாண்டியன் மற்றுமே எடப்பாடியிடம் எற வேண்டும் என்று கேட்கவில்லை . எடப்பாடி தலைமையில் சேரவேண்டும் ன்று நினைபவர் யார் இருந்தாலும் அவர்கள் மனமில்லாதவர்கள் புகழேந்தி உட்பட. அம்மா மற்றும் எம்ஜியார் விசுவாசிகள் எடப்பாடி தவிர வெரி யாராவது தலைவராகி வெளியில் போன எல்லோரையும் இணைத்து போட்டி போட்டால் மட்டும் தான் நீங்கள் அம்மா விசுவாசி இல்லை என்றால் நீள்க பதவிக்காக வேஷம் போதிக்கும் தாட்குறிகள் இஇதுதான் அதிமுக தொண்டர்களின் கருத்து.


Premanathan S
செப் 11, 2025 10:08

உங்கள் சாபம் தேவையில்லை தாங்கள் உள்பட டெபாசிட் வாங்காமல் தோற்பது உறுதி


sankar
செப் 11, 2025 10:00

ரொம்ப வருத்தப்படுவாரு


Mario
செப் 11, 2025 09:43

அதிமுகவை உடைக்க பாஜக முயற்சி விவகாரம்.. பதவி விலகுகிறாரா நயினார் நாகேந்திரன்?


Sundaran
செப் 11, 2025 09:31

பழனிச்சாமியின் தலைக்கனம் கட்சியை காணாமல் போக செய்துவிடும். எம் ஜி ஆர் ஜெயா என்ற நினைப்பு அவருக்கு. செங்கோட்டையனின் வெளியேற்றம் கோவை ஈரோடு பகுதிகளில் கட்சிக்கு சரிவை உண்டாக்கும். Eps டம்ளக் உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார் போலும். எல்லாம் கொடநாடு விவகாரம் தான்


Kanns
செப் 11, 2025 09:18

People Already Cursed-Punished ADMK And Will Do So


swam nithi
செப் 11, 2025 07:30

உங்களூக்கு Deposit தரமாட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை