உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி சென்டம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

உதயநிதி சென்டம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 'நான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்டிலும் உதயநிதி சென்டம் ஸ்கோர் பண்ணுகிறார்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை, தேனாம்பேட்டையில் நடந்த பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பேச்சுப்போட்டி மூலம் திமுகவுக்கு 182 பேச்சாளர்கள் கிடைத்துள்ளனர். பேசி பேசி ஆட்சியை பிடித்த இயக்கம் தி.மு.க., நாங்கள் பேசியது அலங்கார வார்த்தைகள் அல்ல. உலக புரட்சி, நாட்டின் கொடுமைகள் , பிற்போக்குத்தனம் போன்றவற்றை குறித்து பேசினோம். உதயநிதி தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலத்தை மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டியவர் உதயநிதி. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=088t2tez&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சென்டம்

பேச்சுப்போட்டி நடத்தும் பொறுப்பை இளைஞர் அணியிடம் ஒப்படைத்தேன். இளைஞரணி செயலாளர் என்பது பதவி கிடையாது. அது மிகப்பெரிய பொறுப்பு.அந்த பொறுப்பை உணர்ந்து உதயநிதி செயல்பட்டு வருகிறார். இளைஞரணி பொறுப்பை உதயநிதிக்கு கொடுத்தேன். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உதயநிதிக்கு நான் கொடுக்கும் பொறுப்புகளை, பயிற்சியாகப் பார்க்கிறேன். அப்படி பார்த்தால் நான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்டிலும் அவர் சென்டம் ஸ்கோர் பண்ணுகிறார்.

பேசி பேசி...!

தமிழகம் மேன்மை அடையும். திராவிட இயக்கம் வளரும். தி.மு.க.,வால் தமிழகம் வளரும். இது தான் நம்முடைய லட்சியம். அந்த லட்சிய பாதையில் இளைஞரணி வேகமாக செல்கிறது. இதற்கு உதயநிதிவுக்கு, அவருடன் துணை நிற்கும் அனைவரும் மனதார வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மேடையில் பேசி பேசி வளர்ந்தவன் நான். இன்று உங்கள் முன்னால் நின்றுகொண்டு இருக்கிறேன். அன்றைக்கு பேசியது இன்றும் எனது மனதில் இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Rajan A
அக் 27, 2024 22:10

இவரு கூட சொல்லாமல் இருந்தால் எப்படி? டிரிபிள் சென்டம்னு சொல்லியிருக்கலாம்


sankaranarayanan
அக் 27, 2024 19:59

தோப்பனாரு புள்ளையாண்டானை அரசியல் துதி பாடி இப்போதுதான் மக்கள் பார்க்கின்றனர் .எல்லாமே விடிஞ்சால் போச்சு என்பதுபோல நாளை என்ன நடக்கும் என்பதை முற்றுலும் மறந்தே இவர் பேசுகிறார் .எல்லா பரிட்சைகளிலும் தேர்வுபெற்று முதல்மார்க் வாங்கினால் ஏன் இவர் கவலைப்படவேண்டும் .எவ்வளவு தூரம் முட்டுக்கட்டையாய் தூக்கிவிடவிட முடியுமோ அவ்வளவு தூரம் செய்யட்டும். பிறகு மக்களே அரசியலில் மாற்றத்தை விரைவில் கொண்டுவருவார்கள்.


Ramesh Sargam
அக் 27, 2024 19:57

சென்டம் மக்கள் போடவேண்டும். பரீட்ஷை எழுதிய மாணவரின் தகப்பனார் போடக்கூடாது. ஆகையால், இந்த அறிவிப்பு செல்லாது. உதய நிதி மீண்டும் ஒரு தேர்வு எழுதவேண்டும்.


என்றும் இந்தியன்
அக் 27, 2024 18:29

தந்தையின் தேர்வு இப்படி இருக்கின்றது . உனது பெயர் என்ன?. உதயநிதி. உனது தந்தையின் பெயர் என்ன?ஸ்டாலின். நீ எந்த கட்சியில் உள்ளாய்??? திமுக. .............................. இது தான் தேர்வு இதில் சென்டம் உதயநிதி எடுத்தார் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லுகின்றார். என்று கொள்க. இதை விட உண்மையாக தனது கட்சியின் இயலாமையை எந்த முதல்வரும் உண்மையாக ஒப்புக்கொண்டதேயில்லை. "திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம்தான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்".


Design AW
அக் 27, 2024 18:08

தமிழ் வாழ்க தமிழ் வளர்ப்போம் ஆனா நாங்க மட்டும் ஆங்கிலம்தான் பேசுவோம் மாடல் ஆட்சி சென்டம்


Bala
அக் 27, 2024 16:58

மகனுக்கு 100/ 100. மக்களுக்கு 2000 / 2000 ஒரு ஓட்டுக்கு. திருந்தா மு கழகம்.


Bala
அக் 27, 2024 16:55

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.


BALAMURUGAN G
அக் 27, 2024 16:45

இவரின் தந்தை அடிக்கடி பாராட்டு விழா நடத்தி, அதில் சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா கவிஞர்களைக் கொண்டு தன் புகழ் பாட வைத்து புலங்காகிதம் அடைவார். ஆனால், நமது முதல்வரோ 16 அடி பாய்ந்து யாருடைய உதவியும் தேவை இல்லை. தனக்குத் தானே புகழ்ந்து பேசி வந்தார். இன்று இன்னும் ஒரு படி மேலே போய், தனது மகனைத் தானே புகழ்ந்து பேசுகிறார். இவரின் மற்றும் இவர் மகனின் திறமையைதான் போலி கிரிக்கெட் வீரரிடம் ஏமாந்ததிலேயே அகில உலகமும் பார்த்து வியந்ததே கூச்சமே இல்லாமல் எப்படிதான் இது போல் எல்லாம் பொது வெளியில் உளற முடிகிறதோ? ??


narayanansagmailcom
அக் 27, 2024 16:37

சென்டம் என்றால் என்ன அத என்ன சினிமா நடிகன் போடும் வாசனை திரவியம் என்று ஸ்தாலின் நினைக்கிறார் போலும்.


narayanansagmailcom
அக் 27, 2024 16:34

படித்தவருக்கு தான் டெஸ்ட் வைக்க தெரியும். அதனால் தான் உதயநிதி நீட் ரத்து டெஸ்டில் பெயில் ஆகி விட்டார். பெயில் ஆனவரை துணை முதல்வர் ஆக்குபவர் பற்றி நான் சொல்ல தேவை இல்லை. படித்தவருக்கு தான் இதெல்லாம் தெரியும் புரியும்.


முக்கிய வீடியோ