மேலும் செய்திகள்
மலை மீது ஏறிய பக்தர் பலி
10-Oct-2024
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடை பெற உள்ள கார்த்திகை தீப திருவிழா ஆலோனை கூட்டம் நேற்று இரவு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி வருகை தந்தார்.இதற்காக, முன் கூட்டியே திருவண்ணாமலைக்கு வந்த உதயநிதி, திருவண்ணாமலை நகரினுள் வடக்கு மாட வீதியான பெரிய தெரு, மேற்கு கோபுர தெரு, வழியாக, திருவண்ணாமலை - பெங்களூரு இணைப்பு சாலைக்கு வந்தார்.அறநிலையத்துறை சார்பில் கிரிவலப் பாதையில் அருணகிரி நாதர் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நுழைவு வாயில், சுற்றுச்சுவர், நடை பாதை உள்ளிட்ட, 36.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், கிரிவலப் பாதையில், அடி அண்ணாமலை கிராமத்தின் அருகே, 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை மலையையே பக்தர்கள் சிவனாக நினைத்து, 14 கி.மீ துாரம் வலம் வந்து வழிபட்டு செல்கின்றனர். இதில், 12 கி.மீ., துாரத்தை போக்குவரத்து நெரிசல் குறைவாக காணப்படும் இடங்களை, தன்னுடைய காரிலேயே வலம் வந்து ஆய்வு செய்தார் உதயநிதி. கிரிவலப் பாதையின் சில இடங்களில் காரை விட்டு இறங்கி, நடந்து சென்றும் மக்கள் நலப் பணிகளை ஆய்வு செய்தார்.
புரட்டாசி மாத பவுர்ணமி திதி அக்.16ம் தேதி இரவு 7:55 முதல் அக்.17 மாலை 5:25 வரை இருந்தது. பின் 5:26 முதல் பிரதமை திதி தொடங்கி நேற்று மாலை 3:16 மணி வரை நீடித்தது. பிரதமை திதியில் திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்த உதயநிதி மாலை 5:00 மணி அளவில் திருவண்ணாமலை எல்லையான கீழ்பென்னாத்துாருக்கு வருகை தந்து ஆய்வுக்காக கிரிவலப் பாதையை வலம் வந்தார். ஏதோ வேண்டுதல் அடிப்படையிலேயே அவர் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கக் கூடும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
10-Oct-2024