உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி ராவண வம்சம்: எம்.எல்.ஏ., பேச்சால் விவாதம்

உதயநிதி ராவண வம்சம்: எம்.எல்.ஏ., பேச்சால் விவாதம்

சென்னை:

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

தி.மு.க., தியாகராஜன்: துணை முதல்வர் உதயநிதி, பத்து தலை ராவண வம்சம். சனாதனத்தை முறியடிக்க வந்த தலைவர்.அ.தி.மு.க., - கே.பி.முனுசாமி: தி.மு.க., - எம்.எல்.ஏ., தியாகராஜன், கவிதை நயத்துடன் அழகாக பேசினார். துணை முதல்வர் உதயநிதியை, ராவண வம்சம் என்றும், சனாதனத்தை அழிக்க வந்தவர் என்றும் கூறினார்.அதில், சொல் அழகு இருந்தாலும், கருத்துப் பிழை உள்ளது. ராவணன் சிவபக்தர். அவர், சனாதனத்தை அழிக்க முற்பட்டார் என்பது போல ஒப்பிட்டு பேசுவது பொருந்தாத கருத்து.அமைச்சர் சேகர்பாபு: சனாதனமும், இறைபக்தியும் வாழைப்பழம் போன்றது. வாழைப்பழம் என்பது இறைவன். அதிலிருக்கும் தோல் தான் சனாதனம்.கே.பி.முனுசாமி: அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து முற்றுலும் தவறானது. சனாதனத்திற்கும், இறைபக்திக்கும் வேறுபாடுகள் உள்ளன. இரண்டும் ஒன்று தான் என்பது போல அமைச்சரின் உவமை உள்ளது. இரண்டும் ஒன்று என்றால், சனாதன எதிர்ப்பு தேவையில்லை. அதற்காக நீதிமன்ற வழக்குகளும் தேவையில்லை.வி.சி.,- சிந்தனைச் செல்வன்: சனாதனம் வேறு; இறைபக்தி வேறு. தமிழர்களின் மெய்யியல் உணர்வுக்கும், சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

இராம தாசன்
ஏப் 17, 2025 23:00

சரியாத்தான் சொல்லி இருக்கார்.. இன்னும் ஒருத்தர் மனைவியை தூக்கிக் கொண்டு போகும் வம்சம்.. அப்பா யாரையோ தூக்கிக்கொண்டு போனார் என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்...- இந்த விஷயத்தில் இராவணன் வம்சம் தான்..


M Ramachandran
ஏப் 17, 2025 20:19

அதிகம் படிக்காதவர் காமராஜர். ஆனால அவர் தொலை நோக்கு பார்வையும் புத்தி கூர்மையும் இங்குள்ள படிக்காதமேதைகளுக்கு வருமா? அவர்களுக்கு வருவதெல்லாம் லுட் அடிப்பது எப்படி என்பது தான். சரி தானே.


M Ramachandran
ஏப் 17, 2025 20:17

பாதி MLA க்களுக்கு தமிழ் படிக்கவென வராது இதில் சிறு தலிய்ய பெரு தலிய்ய எல்லாம் அடக்கம் இந்த லட்சணத்தில் நீட் எதிர்ப்பாம். குரங்கின்கையில் அகப்பாட்ட பூமாலை கதை தான் நினைவிற்கு வருகிறது.


M Ramachandran
ஏப் 17, 2025 20:14

தகுதிக்கு மீறி புகழக்கூடாது


Bala
ஏப் 17, 2025 18:24

ராவணன் ஒரு ப்ராஹ்மணன்


M S RAGHUNATHAN
ஏப் 17, 2025 15:54

அப்ப இராவணன் கிருத்துவரா?


sankaranarayanan
ஏப் 17, 2025 12:43

உதயநிதி ராவண வம்சம் ராவணன் தவமிருந்து சிவனைத்தொழுது பக்திமிக்க அரசனாக திகழ்ந்தான் அவனுக்கு ஈடாக யாருமே வையகத்தில் இல்லை ராவணன் எங்கே இந்த உதயநிதி எங்கே மலைக்கும் மடுவுக்கும் உள்ள சம்பந்தம் போலத்தான் இருக்கிறதுக்கு இனி இதுபோன்று உவமானம் உவமைகள் சொல்லாதீர்கள்


M Ramachandran
ஏப் 17, 2025 12:20

ராவணன் உயர்ந்த பண்பாளன். சூர்பணையகையின் வேட்கை காம வெரி அவனை தூபா மீட்டு கேடு வினையை ஆற்றும் படி ஆகி விட்டது. அந்த காலத்தில் பாலிடால் இல்லையெ.


Tc Raman
ஏப் 17, 2025 12:09

அப்படி என்றால் ....


Anbuselvan
ஏப் 17, 2025 10:11

ஆக மொத்தம் திமுக அரசில் அறநிலைய துறை அமைச்சர் வாழைப்பழம் என்கிற இறைவனை பத்திரமாக காக்கும் தோல்தான் சனாதனம் என்கிறார். திமுகவில் இதை எப்படி பார்க்கின்றனர் என்பதை நாம் பார்ப்போம்.


புதிய வீடியோ