உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி?: மூத்த கட்சி நிர்வாகிகள் ‛‛பச்சைக்கொடி

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி?: மூத்த கட்சி நிர்வாகிகள் ‛‛பச்சைக்கொடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக துணை முதல்வராக தற்போதைய முதல்வரான ஸ்டாலினின் மகனும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனுமான உதயநிதி தேர்வு செய்யப்பட உள்ளதாக கோட்டை வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.தனது குடும்ப மற்றும் அரசியல் வாரிசான உதயநிதியை முதல்வர் பதவிக்கு தயார்படுத்தி வருகிறார் ஸ்டாலின். இதன் முன்னோட்டமாக உதயநிதி முதலில் துணை முதல்வராக்கப்படுகிறார். தனது எண்ணம் பற்றி மூத்த கட்சி நிர்வாகிளுடன் இன்று (செப்.,18) காலை முதல் கோட்டையில் ஆலோசித்து வருகிறார் ஸ்டாலின். இக்கருத்துக்கு கட்சியில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என்பது வெளிப்படை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q2vs8ty6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0‛‛ஏற்கனவே உதயநிதிக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் இருந்தாலும், அரசு பதவி என்ற கோதாவில் இருந்தால் முதல்வருக்கு உரிய பயிற்சியும் கிடைக்கும். அடுத்த 2026 சட்டசபை தேர்தலில் மாநிலம் முழுவதும் முன்பு மாதிரி சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடியுமா என ஸ்டாலின் நினைக்கிறார். தனக்குப் பதில் உதயநிதியை மாநிலம் முழுவதும் களத்தில் இறக்கவும் அந்த தேர்தலில் வெற்றி பெற்றால் உதயநிதியை முதல்வராக்கவும் ஸ்டாலின் நினைப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத சில திமுக சீனியர் அமைச்சர்கள் கூறுகின்றனர். எனவே, ‛‛துணை முதல்வர் உதயநிதி'' என்ற அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம்.

முதல்வர் முடிவு எடுப்பார்!

சென்னை கோட்டூர்புரத்தில், அமைச்சர் உதயநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: துணை முதல்வர் பதவி குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். அது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட முடிவு. அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருக்கிறோம். என்னை துணை முதல்வராக்க வேண்டும் என தொண்டர்கள் சொல்வது அவர்களின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Sathyanarayanan Sathyasekaren
செப் 18, 2024 22:01

பாராளுமன்றத்தில் பதவியேற்ற கொத்தடிமைகள் அனைவரும் இந்த நடிகன் பெயரை வாழ்க என்று சொன்ன போதே எதிர்பார்த்தது தான்.


தமிழ்வேள்
செப் 18, 2024 20:43

1987 க்கு பிறகு மீண்டும் ஜெ. ஜா.பஞ்சாயத்து 2027ல் வருமா? இந்த சின்னவரு என்ன அந்த சின்னவரா? .. போகப்போக தெரியும்....


Ramesh.M
செப் 18, 2024 19:24

எங்க சமூக நீதி காத்த கட்சி பத்தி யாரும் பேச கூடாது. கோவில் கருவறையில் அணைத்து சாதியினரும் அனுமதி வேண்டும். ஆனா... கட்சி தலைமை பதவி எங்க குடும்பத்துக்கு மட்டும் தான். ஹிந்தி யாரும் படிக்க கூடாது. ஆனா எங்க குடும்பம் நடத்துற பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாய பாடமாகும்... நாங்க ஆட்சிக்கு வந்தா முதல் கையெழுத்து மது ஒழிப்பு என்று சொல்லுவோம். ஆனா செய்ய மாட்டோம். ஏன் என்றால் உங்கள மாதிரி 200 ரூபாய்க்கும் ஒரு quarter க்கும் vote போட ஆள் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை. அடுத்த இளைஞர் அணி தலைவர் இன்ப நிதி வாழ்க வாழ்க .....


ஆரூர் ரங்
செப் 18, 2024 19:04

அப்படியே தோழர் ஜாஃபர் மதுவிலக்கா அமைச்சராக?


ஆரூர் ரங்
செப் 18, 2024 19:01

பெத்துராணி துணைவி முதல்வராக ஆகமுடியுமா? முடியாதா? பாலிடாயிலு ஆசை.


J.V. Iyer
செப் 18, 2024 19:01

உங்களால்தான் தமிழகத்தை இன்னும் படுபாதாளத்திற்கு கொண்டுவரமுடியும். எல்லா கொத்தடிமைகளும் உங்கள் பின்னால் இருக்கும்வரையில் ராஜவாழ்வுதான்.


D.Ambujavalli
செப் 18, 2024 18:40

முதல்வர் வெளிநாட்டில் இருக்கும்போது தனக்கு சம்பந்தமில்லாத துறைகளிலும் ‘ஆய்வு’ நாடகம் நடத்தி, காவல்துறை அதிகாரிகளுடன் மீட்டிங் என்று அவரே ‘proxy ‘ முதல்வராகத் தானே இருந்தார் என்ன, இப்போதுதான் official ஆக வெளிவருகிறது


rajan_subramanian manian
செப் 18, 2024 18:28

மூத்த அமைச்சர்கள் உதயநிதி பதவி ஏற்கும் போது காலில் விழுந்து தங்கள் விசுவாசத்தை அடுத்த தலைமுறைக்கும் விசுவாசமாக இருப்போம் என்று உறுதிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கூட்டணி தலைவர்கள் காலில் விழுவதை பார்க்க தமிழகம் முழுவதும் ஆவலுடன் இருக்கிறோம்.


Apposthalan samlin
செப் 18, 2024 17:59

ஸ்டாலினுக்கு பின் கட்சியே வலி நடத்த உதயநிதி தான் சிறந்தவர் என்று தோன்றுகிறது இல்லை என்றால் கட்சி உடைந்து சின்ன பின்னாமாகி விடும் .ஸ்டாலினுக்கு உடம்பு சரி இல்லை வயது மற்றும் சுகவீனம் ஆதலால் உதயநிதியை தயார் படுத்த வேண்டும் .


theruvasagan
செப் 18, 2024 18:30

அந்த கட்சி ,ஜனநாயகம் தழைத்தோங்கும் கட்சி. காலங்காலமாக உள்ள பெருசுகளும் அரதப் பழசுகளும் முணுமுணுப்பே இல்லாமல் வாரிசுகளுக்கு வால் பிடித்து அடிமை சேவகம் செய்யும் கடமை கண்ணியம் கட்டுக்கோப்பு நிறைந்த கட்சி.


ஆரூர் ரங்
செப் 18, 2024 18:59

வழி நடத்த சரியான ஆள். கூடவே உதவிக்கு பெத்துராணி?


sridhar
செப் 18, 2024 19:27

அப்படி ஒன்னும் கஷ்டப்பட்டு காப்பாத்த வேண்டாம் , அந்த கட்சி ஒழிந்தால் நாட்டுக்கு நல்லது .


Hari
செப் 18, 2024 19:41

7000 crores by stalin, but apposthalar will get only rs 200..why this muttu?


GoK
செப் 18, 2024 17:06

என்று மடியும் இந்த அடிமைகளின் மோகம் ...பாடியவன் மடிந்து போனான் இந்த மண்ணின் அடிமைகள் சுதந்திரம், குடியரசு இவற்றின் பொருளறியாமல் விட்டெறியும் காசுக்காகவும் ஊத்திக்கொடுக்கும் சாராயத்துக்காகவும் பொறுக்கிக்கொள்ள போடும் பிரியாணிக்காகவும் தங்கள் வாக்குகளை கொடுத்து ஒரு குடும்பத்தின் கையில் நாட்டை விற்கின்றார்களே ...இவர்களுக்கு எதுக்கு சுதந்திரம் எதுக்கு குடியரசு எதுக்கு அரசியல் சாசனம்? கொத்தடிமைகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை