உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  யானை சிந்தனை போலத்தான் மனித மூளையும் சிந்திக்கும் உதயநிதி புது கண்டுபிடிப்பு

 யானை சிந்தனை போலத்தான் மனித மூளையும் சிந்திக்கும் உதயநிதி புது கண்டுபிடிப்பு

காரைக்குடி: ' 'மாணவர்கள் அதிக அளவில் ரீல்ஸ் பார்க்கின்றனர். ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை,'' என காரைக்குடியில் நடந்த அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசினார். அவர் பேசியதாவது: கல்வி என்பது பவர்புல்லானது. குட்டியாக இருக்கும் யானையை சிறு கயிற்றில் கட்டி வைப்பர். அதை அறுத்துக் கொண்டு செல்ல முடியாமல் அது தடுமாறி நிற்கும். அது பெரிதாக வளர்ந்து நிற்கும் நிலையிலும் கயிற்றில் கட்டி வைத்திருக்கும் மன நிலையிலேயே இருக்கும். அதனால் தான், யானை பாகன் சொல்பேச்சு கேட்டு ஓரிடத்தில் இருக்கிறது. அதாவது பழக்க தோஷம் தான் அனைத்துக்கும் காரணம். நம் மனித மூளையும் அப்படித்தான். ஒரு விஷயத்துக்கு பழகி விட்டால், அப்படியே தான் தொடரும். அதனால் தான், எதையும் முடியாது என நினைத்து, மனதை பழக்கக்கூடாது. முயற்சி செய்வேன்; வெற்றி பெறுவேன் என நினைக்க வேண்டும். அப்படித்தான், மாணவர்கள் சிந்தனை திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். விரைவில் கல்லுாரி மாணவர்களுக்கும், தமிழக அரசின் இலவச 'லேப்டாப்' வழங்கப்படும். மாணவர்கள் அதிக அளவில் ரீல்ஸ் பார்க்கின்றனர். ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை. மாணவர்களை ஜெயிக்க வைக்கக்கூடியது கல்வி மட்டுமே. கல்வியுடன் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். ஒரு குடும்பம் முன்னேறினால் சமுதாயமே முன்னேறும். அது கல்வியால் தான் முடியும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி