உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால்பந்தாட்ட நடுவர் விருது பெற்ற வெங்கடேசுக்கு உதயநிதி வாழ்த்து

கால்பந்தாட்ட நடுவர் விருது பெற்ற வெங்கடேசுக்கு உதயநிதி வாழ்த்து

சென்னை: அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில், கடந்த ஆண்டுக்கான சிறந்த நடுவர் விருதை பெற்ற வெங்கடேஷை, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேரில் அழைத்து வாழ்த்தினார். அகில இந்திய கால்பந்து சம்மேளனம், ஒவ்வொரு ஆண்டும் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை, பயிற்சியாளர், நடுவர், கிளப் ஆகியவற்றுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. கடந்தாண்டுக்கான விருதுகள், சமீபத்தில், டில்லியல் வழங்கப்பட்டது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் சிறந்த எலைட் நடுவருக்கான விருதையும், தமிழக காவல்துறையில் பணியாற்றும், இந்துமதி, சிறந்த வீராங்கனைக்கான விருதையும் பெற்றனர். நடுவர் விருது பெற்ற வெங்கடேஷ், 2014 முதல் தேசிய கால்பந்தாட்ட நடுவராக உள்ளார். இவர் பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டுள்ளார். அகில இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் எலைட் நடுவராக உள்ள இவர், 2017, 2018, 2020, 2021, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஐ.எஸ்.எல்., போட்டிகளுக்கான நடுவராக இருந்துள்ளார். இவர், ஏற்கனவே 2019லும் இந்த விருதை பெற்றுள்ளார். கடந்தாண்டு நடந்த ஐ.எஸ்.எல்., மற்றும் கலிங்கா கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருதை, டில்லியில் நடந்த விழாவில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார். அவரை, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, இன்று நேரில் அழைத்து வாழ்த்தினார். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த இந்துமதி கதிரேசன், 2023 - 2024ல்ல ஒடிஷா எப்.சி.,யுடன் விளையாடி, ஐந்து கோல்களை போட்டு, மகளிர் லீக் பட்டத்தையும், ஐ.டபிள்யூ.எல்லிஸ் மிட்பீல்டர் விருதையும் பெற்றார். இவர் கடந்த பிப்.,ல் துருக்கியில் நடந்த போட்டியில், எஸ்டோனியாவுக்கு எதிராக கோல் அடித்தார். இவருக்கு, கடந்தாண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இவருக்கும் அமைச்சர் தன் சமூக வலைதளத்தின் வாயலிாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ