மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
6 minutes ago
அனல்மின் நிலையத்தில் உற்பத்தி அடியோடு முடக்கம்
7 minutes ago
சென்னை: 'ஸ்வயம்' இணையதளத்தில் புதிய பாடத்திட்டம் உருவாக்க, பேராசிரி யர்களுக்கு, யு.ஜி.சி., அழைப்பு விடுத்துள்ளது. 'ஸ்வயம்' இணையதளம் வழியாக, மாணவர், மாணவியருக்கு குறுகிய கால இலவச 'ஆன்லைன்' படிப்புகளை, மத்திய கல்வித் துறை கற்பித்து வருகிறது. குறிப்பாக, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடங்களும், இன்ஜினியரிங், கணிதம், அறிவுசார் சொத்துரிமை பாடங்களும் நடத்தப்படுகின்றன. அந்த வரிசையில், 'பிரதமரின் கதி சக்தி' எனும், ஆன்லைன் படிப்புக்கான பாடத்திட்டத்தை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்தியாவின் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்து, பாடத்திட்டம் வடிவமைக்க, பேராசிரியர்களுக்கு, யு.ஜி.சி., எனும் பல்கலை மானியக் குழு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு விண்ணப்பிக்க, முனைவர் பட்டத்துடன், ஐந்து ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் அவசியம். பாடத்திட்டம் உருவாக்கும் பேராசிரியர்களுக்கு, நிதியுதவிகள் வழங்கப்பட உள்ளன. விருப்பமுள்ள பேராசிரியர்கள், ஸ்வயம் இணையதளத்தின், https://swayam.inflibnet.ac.inஎன்ற பக்கத்தில், 2026 ஜனவரி 4ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என, யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.
6 minutes ago
7 minutes ago