உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்

சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த பயணி நரேஷிடம் சோதனை செய்த போது, கணக்கில் காட்டப்படாத ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்தப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ