கரூரில் கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கரூர்: கரூரில் விஜய் பிரசாரம் செய்த இடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன் ஆய்வு செய்தார். அவர் அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.கரூரில் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று (செப் 29) கரூரில் விஜய் பிரசாரத்தின் போது நெரிசல் ஏற்பட்ட இடத்தில் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=35u5qqh6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் விவரங்களைக் கேட்டறிந்தார். அப்போது அவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.