உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒவ்வொரு இல்லங்களிலும் வந்தே மாதரம் ஒலிக்கட்டும் மத்திய அமைச்சர் விருப்பம்

ஒவ்வொரு இல்லங்களிலும் வந்தே மாதரம் ஒலிக்கட்டும் மத்திய அமைச்சர் விருப்பம்

சென்னை: 'ஒவ்வொரு இல்லங்களிலும், வந்தே மாதரம் பாடல் ஒலிக்கட்டும்' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: கடந்த 1875ம் ஆண்டு பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய, 'வந்தே மாதரம்' தேசிய பாடலை, 1896ல் கொல்கட்டா காங்கிரஸ் மாநாட்டில், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்து பாடினார். பின், விடுதலைப் போரின் உணர்ச்சி முழக்கமாக, நாடு முழுதும் எதிரொலித்தது. 'வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்' என்ற உணர்ச்சி ததும்பும் பாடலை எழுதி, தமிழகத்தில் தெருவெல்லாம் முழங்க செய்தார் பாரதியார். வந்தே மாதரம் பாடலின், 150ம் ஆண்டு விழாவை, நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என, பிரதமர் மோடி, 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக, வேண்டுகோள் விடுத்திருந்தார். இன்று வந்தே மாதரம், 150வது ஆண்டு கொண்டாட்டத்தில், காலடி எடுத்து வைக்க உள்ளோம். ஒவ்வொரு இல்லங்களிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கட்டும். நம் உள்ளங்களில், தேச பக்தியை ஒளிர செய்யட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வாசன் அறிக்கை இதுபோல் த.மா.கா., தலைவர் வாசன் வெளியிட்ட அறிக்கையில், நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும், இந்திய தேசியத்தின் உணர்வுக்கும், 'வந்தே மாதரம்' பாடலானது, தேசிய பாடலாக ஒலிக்கப்படுகிறது. இன்று வந்தே மாதரத்தின், 150-வது ஆண்டில் நுழைய இருக்கிறோம். தேச பக்தி மிக்க வந்தே மாதரம் பாடலை தொடர்ந்து போற்றி பாடி, நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தேசப்பற்றை, கலாசாரத்தை, உணர்வை, ஒற்றுமையை, விழிப்புணர்வை எடுத்து செல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ