உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி மோதலால் பல்கலை மூடல்: 3 மாணவர்கள் கைது

ஜாதி மோதலால் பல்கலை மூடல்: 3 மாணவர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வளாகத்தில் டூவீலர் பார்க்கிங் தொடர்பாக மாணவர்கள் ஜாதி ரீதியாக மோதிக்கொண்டதில் இருவர் காயமுற்றனர். பல்கலைக்கு விடுமுறை விடப்பட்டது. 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வளாகம் அபிஷேகப்பட்டியில் உள்ளது. மாணவர்கள் டூவீலரில் பல்கலை வளாகத்தில் வேகமாக சுற்றித் திரிவதால் பல்கலை நுழைவாயில் அருகில் அனைத்து மாணவர்களுக்கும் டூவீலர் பார்க்கிங் வசதி உள்ளது. வரலாற்று துறை முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் டூவீலரை வாகன நிறுத்தத்தில் நிறுத்தாமல் நிறுத்தாமல் கேண்டீன் அருகில் ஓட்டியுள்ளார். இரண்டாம் ஆண்டு மாணவர் முத்துஅருள் செல்வம், நீ எப்படி டூவீலரை இங்கு கொண்டு வந்தாய் என கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. முதலாம் ஆண்டு மாணவனுக்கு ஆதரவாக வந்த இரண்டாம் ஆண்டு மாணவர் லட்சுமி நாராயணனுக்கும் முத்து அருள் செல்வத்திற்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் காயமுற்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் ஜாதி மோதலாக மாறியது. லட்சுமி நாராயணனை தாக்கியதாக முத்து அருள் செல்வம், சுந்தர் ஜான், மதார் பக்கீர் ஆகிய மூன்று மாணவர்களையும் வன்கொடுமை வழக்கில் போலீசார் கைது செய்தனர். பல்கலைக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V RAMASWAMY
ஆக 30, 2025 10:31

சாதி மத பேதம் ஏதுமறியாமல் தோளோடு தோள் கொடுத்து சகோதரத்துவமுடன் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்த அந்த நூற்றாண்டு எங்கே? கருப்பு வெள்ளை கொடி கட்சி கால் ஊன்றுவதற்காக அவர்கள் வெறுக்கும் அந்த ஆச்சாரியாருடன் கை கோர்த்து சாதி மாத பேதங்களை விஷமாக மக்கள் மனங்களில் திணித்து ஆட்சியைப் பிடித்ததும் ஏறிய ஏணியை உதைத்து, அராஜகமாக நடந்து சமூகத்தையையே கெடுத்துவிட்டனர். அந்த நூற்றாண்டுதான் இங்கே இப்படி கொடி கட்டிப்பறந்து எங்கும் எதற்கும் சண்டைகள், சச்சரவுகள், கொலைகள், கொள்ளைகள், இன்ன பிற அவலங்கள். ஆனால் அவர்கள் மட்டும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள், வளர்ந்துவிட்டார்கள், விஷ ஜந்துக்களைப்போல. இனியாவது மக்கள் விழித்துக்கொள்ளட்டும்.


RRR
ஆக 30, 2025 10:27

திராவிஷ மாடல் ஆட்சியில சம்மூவ நீதி சந்துல சிரிக்குது... கேட்டா ..பூமின்னு உருட்டுறது....


raja
ஆக 30, 2025 08:38

அப்போ அந்த ஈரோடு ஜாதியை ஒழிச்சிட்டார் என்பது எல்லாம் பொய்யா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை