உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாறு காணாத உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரிப்பு; ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்

வரலாறு காணாத உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரிப்பு; ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்

சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 25) ஆபரண தங்கம் கிராம் 12 ஆயிரத்து 820 ரூபாய்க்கும், சவரன், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிசம்பர் 26) தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 12 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு, 9 ரூபாய் உயர்ந்து, 254 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 9,000 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 274ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ, 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த சில தினங்களாக தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது.கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி