உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் இடிந்து விழுந்த 3 மாடி... அலறியடித்து ஓடிய மக்கள்!

சென்னையில் இடிந்து விழுந்த 3 மாடி... அலறியடித்து ஓடிய மக்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சென்னையில் பயன்பாட்டில் இல்லாத சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் பிராட்வே பகுதி எப்போதும் பரபரப்பான பகுதியாகும். இங்கு சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த விடுதி கட்டிடம் ஒன்று உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு 3 மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது பயன்பாட்டில் இல்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rtx5c361&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிதிலம் அடைந்த, ஆங்காங்கே விரிசல்களுடன் கட்டிடம் காட்சி அளித்தது. இதன் காரணமாக அந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந் நிலையில் அந்த 3 மாடி கட்டிடம் திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.முழு கட்டிடமும் சுற்றுச்சுவருடன் சேர்த்து இடிந்து விழ. அப்போது அவ்வழியாக சென்ற 3 பேர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.சம்பவ பகுதியில் மீட்புப் பணிகளில் இறங்கிய அவர்கள், காயம் அடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கட்டிட இடிபாடுகளில் யாரேனும் உள்ளனரா என்று ஆய்வு நடத்தினர். கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரள ஆரம்பித்தனர்.இதையடுத்து, அந்த பகுதியில் யாரும் நுழையாத வண்ணம் தடுப்புகளை ஏற்படுத்திய தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Manoharan
நவ 12, 2024 21:50

அந்த கட்டிடம் ஆங்கிலேயர் கால கட்டிடம் .


raja
நவ 11, 2024 20:14

பல ஆண்டுகள் என்பதில் இருந்தே தெரிகிறது அது கட்ட பட்ட காலம் கட்டுமர விங்யான ஊழல் வாதி ஆட்சியில் என்று....


Anantharaman Srinivasan
நவ 11, 2024 21:27

No Congress ஆட்சியில்.


வைகுண்டேஸ்வரன்
நவ 11, 2024 21:36

பட்டேல் சிலை ஒழுகுது. அயோத்தி ராமர் கோவில் ஒழுகுது. மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை ஒரே மழைக்கு கீழே விழுந்து நாலு பீஸ் ஆயிடுச்சு. அடல் பிரிட்ஜ் மூணே மாசத்துல விரிசல் விட்டுடுச்சு. இதுக்கெல்லாம் யாராச்ச்சும் ஆர் எஸ் எஸ் காரன் கட்டினது, பாஜக கட்டினது. ஆரிய கட்டிடம், அது இது ன்னு ஏதாச்சும் சொன்னார்களா? யோசிக்கணும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 11, 2024 20:00

அந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன என்று தெளிவா போட்டிருக்கு. இதனால் பலவீனப்பட்ட கட்டிடம் விழுந்துடுச்சு. இதில் ஏன் திராவிடம்? விடியல்? இது என்ன மனநிலை? பரிதாபங்கள்.


Jagannathan Narayanan
நவ 12, 2024 07:04

From where you got this message


வைகுண்டேஸ்வரன்
நவ 11, 2024 19:58

"..அந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.". இதனால் பாதி உடைந்த கட்டிடம் மொத்தமா விழுந்துடுச்சு. இதில் ஏன் இனம், விடியல் என்று எழுதுகிறார்கள்? என்ன மனநிலை இது?


sridhar
நவ 11, 2024 20:30

எதுக்கெடுத்தாலும் பார்ப்பனர்களை குறை சொல்லும்போது மட்டும் இனிக்குதா .


வைகுண்டேஸ்வரன்
நவ 11, 2024 19:54

தி. ம. வாசகர்களில் பெரும்பாலர் மனசில் திராவிடமும் திமுக வும் ஆழப் பதிந்து ஆட்டுவிக்கிறது பாவம். எது எடுத்தாலும் பத்து ரூபாய் கடை மாதிரி, எது எடுத்தாலும் திமுக, திராவிடம், விடியல் தான் அவர்கள் கருத்துகளில். பரிதாபமாக இருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து வெறுப்பு அரசியல் பேசினால் எல்லாரும் திமுக வை விட்டு பாஜக வை ஆதரிச்சுடுவாங்க என்று நினைக்கிறார்களோ?


அப்பாவி
நவ 11, 2024 19:52

அடப்போங்கடா... நேத்து கட்டுன ராமர் கோவில், பார்லிமெண்ட் எல்லாமே ஒழுகுது. நாம எல்லாரும் திருட்டு இந்தியர்கள் . ஒத்துக்கோங்க.


பிரேம்ஜி
நவ 12, 2024 08:25

ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை!


ஆரூர் ரங்
நவ 11, 2024 19:17

விடியல் சூப்பர்.


கூமூட்டை
நவ 11, 2024 19:01

இது தான் திராவிட முன்னேற்றக் கழகம் மாடல். யார் காலத்தில் கட்டப்பட்டது. திராவிட ஆட்சியிலா??


Raghavan
நவ 11, 2024 18:52

அதுவா இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு ஒரு பில்லை போட்டு இடித்ததாக கணக்கு காண்பித்து ஆட்டையை போட்டுவிடுவார்கள்.


சமீபத்திய செய்தி