‘ஆதார் பயோமெட்ரிக்’ புதுப்பித்தலில் உ.பி., சாதனை
சென்னை: தனித்துவ அடையாள ஆணையமான யு.ஐ.டி.ஐ., கடந்த 10 மாதங்களில், 5 வயது மற்றும் 15 வயதை எட்டிய குழந்தைகளின் கைரேகை, விழித்திரை, புகைப்படம் ஆகிய, ‘பயோமெட்ரிக்’ விபரங்களை இலவசமாக பதிவு செய்தது. இதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், 22.64 கோடி பேரின் ஆதார் விபரங்களை புதுப்பித்து, உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் பிடித்தது. அடுத்து மஹாராஷ்டிராவில், 12.12 கோடி; பீஹாரில் 11.67 கோடி பேரின் ஆதார் பயோமெட்ரிக் விபரங்கள் புதுப்பிக்கப்பட்டு, அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. தமிழகம், 7.56 கோடி பேரின் ஆதார் பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பித்து, 6ம் இடத்தை பிடித்துள்ளது.
2 கோடி ஆதார் பதிவுகள் நீக்கம்
மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட இறப்பு தகவல்களின் அடிப்படையில், 2 கோடி ஆதார் பதிவுகளை நீக்க, மத்திய தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, 2 கோடி பேரின் விபரங்களை, தனித்துவ அடையாள ஆணையம் நீக்கி உள்ளது. இனி, உயிரிழந்தோரின் ஆதார் விபரங்களை, ‘மை ஆதார்’ இணையதளம் வாயிலாக நீக்க கோரும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.