உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்

மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டெல்டா மாவட்டங்களில், மழையில் நனையும் நெல் மூட்டைகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர், நா கப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு, 6.09 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. வழக்கமான சாகுபடி பரப்பை விட இது, 2 லட்சம் ஏக்கருக்கு மேல் அதிகம். நெல் அறுவடை துவங்கி நடந்து வருகிறது. அறுவடை இயந்திர பற்றாக்குறை நிலவுவதால், கூடுதல் வாடகை வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கூடுதல் வாடகை வசூல் செய்தால், இயந்திர உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, திருவாரூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார். அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர, வேளாண் வணிக பிரிவினருக்கு, துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். ஆனால், வாடகைக்கு போதிய அளவில் இயந்திரங்களை, வேளாண் வணிக பிரிவினர் ஏற்பாடு செய்யவில்லை. அறுவடையின் போதே, நடப்பாண்டு நெருக்கடியை சந்தித்துள்ள டெல்டா விவசாயிகள், அவற்றை அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்வதற்குள், படாதபாடு பட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் எச்சரித்த பின்னரும், கொள்முதல் மையங்களில் மூட்டைக்கு, 40 ரூபாய் கமிஷன் வசூல் தொடர்கிறது. டெல்டா மாவட்டங்களில், சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஈரப்பதத்தை காரணம் காட்டி, நெல் கொள்முதல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே, பல டன் நெல் மூட்டைகள், மழையில் நனையாத வகையில் தார்ப்பாய் போட்டு மூடிவைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அங்கேயே மூட்டைகள் இருந்தால், ஈரப்பதம் அதிகரித்து நெல்மணிகள் முளைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அரசு கிடங்குகள் மட்டுமின்றி, தனியார் கிடங்குகளிலும் நெல் மூட்டைகளை பாதுகாக்க, டெல்டா மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார். மழையால் கொள்முதல் பணிகள் முடங்கியதால், நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும், கிடங்குகளுக்கும் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை, கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கிடங்குகளிலேயே நெல் மூட்டைகளை எடை போட்டு, கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் முறைகேடு குறித்து பேசினால், அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர். அதனால், பெயரை சொல்லி பேட்டி கொடுக்க முடியாத நி லையில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஆரூர் ரங்
அக் 06, 2025 11:56

இந்தாண்டு சம்பா சாகுபடி பரப்பளவு மிகவும் குறைந்துள்ளது. குறுவை நெல்லோ மழையில் நனைந்து வீணாகி வருகிறது. ஆனாலும் தேர்தல் நேரத்தில் ஆளுக்கு 1000 கொடுத்து அமுக்கி விடுவார்கள். சராசரி தமிழனை அறிவாளி என்ன நம்புவது மடைமை.


Anand
அக் 06, 2025 10:47

கேடுகெட்ட ஆட்சி..


shyamnats
அக் 06, 2025 09:52

விடியல் ஆட்சியின் அவலங்கள். முறையான சேமிப்பு கிடங்குகள் கட்டாமல், இத்தனை ஆண்டுகள்? வருடாவருடம் கொள்ளையடிக்க தார்பாலின் வாங்கும் சடங்குகள். நிரந்தர தீர்வை நோக்கி நகர்ந்தால், மக்கள் முன்னேறினால் சுய சார்பு அடைந்தால், இந்த கட்சிகளுக்கு நிரந்தர கொத்தடிமைகள், டாஸ்மாக் மது பிரியர்கள் எப்படி கிடைப்பார்கள்? மக்கள் மூன்றாவதாக இன்னொரு ஆட்சியாளரை - பிஜேபி போல தேர்ந்தெடுத்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.


VENKATASUBRAMANIAN
அக் 06, 2025 08:26

கடந்த ஐம்பது வருடங்களாக இதுதான் நிலைமை. இரண்டு கழகங்களின் லட்சணம் இதுதான். எவ்வளவு கட்டிடங்கள் பாழடைந்து உள்ளன. அதை சரி செய்தாலே இதற்கு ஓரளவு தீர்வு கிடைக்கும். இதைவிட முதல்வருக்கு ஈவெரா புகழ் பாடுவதிலும் துபாய் செல்வதிலும் மட்டுமே கவனம். இதுதான் திராவிட மாடல்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 06, 2025 08:22

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துட்டதா கிம்ச்சை மன்னர் சொன்னாரே >>>> அது எதுக்காக >>>> குடும்பத்துக்காக எதுனா நடவடிக்கை எடுத்திருப்பார் ....


பாலாஜி
அக் 06, 2025 08:16

எந்த கட்சி ஆட்சியிலும் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க கிடங்குகள் இதுவரை ஏன் கட்டப்படவில்லை?


அருண், சென்னை
அக் 06, 2025 07:27

மஹிந்திரா குழுமம் அல்லது ஷிவ் நாடார் போன்றோர் கொஞ்சம் முன்வந்து நெல் சேமிப்பு கிடங்கை கட்டி தரலாம்...இவர்கள் இருவரும் தன்னார்வலர்கள் கூட, தமிழக கொள்ளை அரசை இனியும் விவசாயிகள் நம்பவேண்டாம்... திமுகாவில் தீ மட்டும்தான் உள்ளது... மக்களை சுட்டு எரிக்க... இதை பற்றி எழுத இங்குள்ள திமுகா-IT பரப்புரையாளர்களுக்கு கண்ணுதெரியாமல் போகும்...அவர்கள் அரிசியே சாப்பிடுவதில்லை... காசுதான் சாப்பிடுகிறார்கள்


R. SUKUMAR CHEZHIAN
அக் 06, 2025 07:13

இது தான் திராவிட மாடல், கருணாநிதிக்கு சிலை, பொழுது போக்கு பூங்கா இதற்கெல்லாம் பணம் இருக்கு மக்களின் அடிப்படை தேவையாக விவசாய பொருட்களை சேமிக்க திட்டம் இல்லை இந்த திராவிட கட்சிகள் தமிழகத்தை குட்டிச்சுவராகிவிட்டனர் கடன் வாங்கி என்ன செய்தனர்? தமிழக மக்கள் தான் திருந்த வேண்டும்.


Field Marshal
அக் 06, 2025 06:56

இப்போதைக்கு விஜயும் அவர் கட்சியும் தான் தலையாய பிரச்னை


raja
அக் 06, 2025 06:54

அப்பனுக்கு அப்பண்ணுபயோக படுத்தின பெனாவுக்கு சிலை வைக்க எல்லாம் இந்த திருட்டு திராவிட கேடுகெட்ட மாடல் அரசுக்கு நிதி இருக்கும்... ஆன்ன இதுக்கு மத்திய அரசு நிதி கொடுக்கலன்னு பொய்யா சொல்லுவானுவோ இந்த இழிபிறவிகள்....