உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாய்மை பணியாளர் பிரச்னைக்கு அவசர தீர்வு

துாய்மை பணியாளர் பிரச்னைக்கு அவசர தீர்வு

துாய்மை பணியாளர் பணியிடங்கள் தனியார் மயமாக்கப்படுவது குறித்து, ஆளாளுக்கு ஒரு கருத்து இருக்கும். அனைவருடைய கருத்துகளையும் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆனால், இந்த விஷயத்தில் நிதானமாக பேச முடியாது என்பது என் கருத்து. அதனால், இந்த விஷயத்தை அப்படியே ஆறப்போடாமல், அவசரமாக பேசி முடிவெடுக்க வேண்டும். இது குறித்து முதல்வரிடம் எடுத்து கூறுவேன். துவக்கத்தில் இருந்து, துாய்மை பணியாளர் பிரச்னையில், என் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது; இனியும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். மற்றபடி, இந்தப் பிரச்னையை சுமுகமாக தீர்க்க வேண்டும் என்ற மனநிலையோடு, அனைவரும் பிரச்னையை அணுக வேண்டும். அரசியல் செய்கிறேன் என்ற பெயரில், துாய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடக் கூடாது. - கமல், தலைவர், மக்கள் நீதி மய்யம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ