உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுவில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம்: தேசிய சட்டப் பள்ளி மாணவர் மிரட்டப்பட்டாரா?

மதுவில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம்: தேசிய சட்டப் பள்ளி மாணவர் மிரட்டப்பட்டாரா?

திருச்சி : திருச்சி மாவட்டம், முத்துக்குளம் அருகே உள்ள தேசிய சட்டப்பள்ளியில், கடந்த 6ம் தேதி, இளங்கலை, ஐந்தாம் ஆண்டு மாணவர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சட்டப்பள்ளி விடுதியின், 2வது மாடியில் மது பார்ட்டி நடந்துள்ளது.அப்போது, ஐந்தாம் ஆண்டு படிக்கும் இரண்டு மாணவர்கள் போதையில், தங்களின் சிறுநீரை மதுவில் கலந்து, பார்ட்டியில் பங்கேற்ற மற்றொரு மாணவருக்கு கொடுத்துள்ளனர்.அதைக்குடித்த மாணவர், சற்று நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். அடுத்த நாள், மற்றொரு மாணவர் வாயிலாக தனக்கு நண்பர்கள் சிறுநீர் குடிக்க கொடுத்ததை தெரிந்து கொண்ட மாணவர், குடும்பத்தாரிடம் தெரிவித்தார். அவர்கள், சட்டப்பள்ளி பதிவாளர் பாலகிருஷ்ணனிடம், 10ம் தேதி புகார் அளித்தனர். விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. அவர்கள், மூன்று மாணவர்களிடமும் எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் வாக்குமூலம் வாங்கி, வீடியோ பதிவு செய்தனர். இந்த குழு, வரும் 18ம் தேதி, கல்லுாரி நிர்வாகத்திடம் அறிக்கை அளிக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பாதிக்கப்பட்ட மாணவர், தான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கி உள்ளார். அவர் மிரட்டல் காரணமாக புகாரை வாபஸ் பெற்றாரா என, மாணவர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த சம்பவம் பட்டியலின சமுதாயத்துக்கு எதிராக நடந்தது எனசித்தரிக்க சிலர் முயற்சித்துள்ளனர்.ஆனால், இவ்விவகாரத்தில் சிக்கியுள்ள ஒரு மாணவரும் அதே சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அதற்கு வாய்ப்பில்லை என, தேசிய சட்டப்பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.திருச்சி தேசிய சட்டப் பள்ளி ராம்ஜிநகர் அருகே அமைந்துள்ளதால், போலீசார் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும், அவர்கள் கண்ணில் மண்ணை துாவி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அங்கு ஜோராக நடக்கிறது. சட்டப்பள்ளி சம்பவம் கூட, கஞ்சா புகைத்ததால் நடந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

PalaniSamy Kumar
ஜன 16, 2024 08:49

முத்துக்களம் எங்கேயா இருக்கு நவலூர் குட்டை குட்டி ஆகிய எங்கள் கிராமத்து மக்கள் கொடுத்த நிலத்தில் அந்த சட்டப் பள்ளி உள்ளது எங்கள் கிராம எல்லையிலேயே அது அமைந்துள்ளது


தமிழ்வேள்
ஜன 16, 2024 08:20

சாதி, கட்சி கரை வேட்டி கட்டி திரிபவர்களை,நடு ரோட்டில் அந்த வேட்டி ஐ உருவி விட்டு அடி வெளுத்து வாங்கனால் மட்டுமே இந்த மாநிலம் ஒழுங்கு ஆகும்


Ramesh Sargam
ஜன 16, 2024 06:54

மக்கள் தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கிறார்கள். மதுவில் சிறுநீர் கலக்கிறார்கள். திமுக என்ன கலப்பட கழகமா? கலப்பட அரசா?


Anantharaman Srinivasan
ஜன 15, 2024 23:39

சட்டப்பள்ளி விடுதியின், 2வது மாடியில் பிறந்தநாள் விழாவில் மது பார்ட்டி.. பசங்களுக்கு உள்ளேயே BAR பண்ணி கொடுக்கணும். அப்பதான் சட்டணுக்கங்களை கரைத்து குடிக்க வசதியாயிருக்கும். இனி சட்டம் ஒரு இருட்டறைன்னு சொல்லாதீங்க.. சட்டம்படிக்கும் போதே போதை கண்கள் இரண்டரை தான்.


NicoleThomson
ஜன 15, 2024 20:07

சட்டப்பள்ளியில் மது பார்ட்டி , கொண்டாடியது பட்டியலின மாணவர்கள் , எப்பா குருமா , உன்னால் நல்லா விளங்கிடுச்சு


அப்புசாமி
ஜன 15, 2024 19:25

ஜெர்மனியில் சிறுநீரிலிருந்து பீர் தயாரிக்றாங்களாம். இங்கேயிம் அதே டெக்னாலஜி கொண்டாரலாமே.


Pandi Muni
ஜன 15, 2024 18:57

ரெண்டுமே ஒண்ணுதான். நல்லா குடிங்க.


Seshan Thirumaliruncholai
ஜன 15, 2024 17:53

கால் நடையாய் அயோத்திக்கு செல்லும் நபரை காவல்துறையால் தடுக்கமுடியும். இதுதான் காவல்துறையின் திறமை. அயோத்திக்கு செல்வதை விட மது குடிப்பது புனிதமோ? மாணவர்கள் நினைத்து இருக்கலாம் மது குடிப்பது போல் சிறுநீர் குடிப்பது தவறு இல்லையென்று. மது குடிப்பதை சட்டம் அனுமதிக்கிறது/ சட்டம் அனுமதித்தால் தவறும் செய்யலாம்


karupanasamy
ஜன 15, 2024 16:25

சட்டசபைத்தேர்தலில் முட்டாப்பயலுக்கு டெபாசிட் தேறாது


duruvasar
ஜன 15, 2024 13:31

திராவிட மாடல் அரசில் அதிகமாக பேசப்படுவது காலுக்கு நடுவில் போவது , சிறுநீர், மலம் இந்த வார்த்தைகள்தான் அதிகம் பேசப்படுகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை