உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகன் வாங்கிய கடனுக்கு தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்

மகன் வாங்கிய கடனுக்கு தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மணிகண்டன் என்பவர் வாங்கிய ரூ.6 லட்சம் கடனுக்காக ரூ.64 லட்சம் திருப்பி தர வேண்டும் என கேட்டு, அவரது தந்தையை காரில் கடத்திய கந்துவட்டி கும்பல், கைவிரலை வெட்டினர். இது தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த நடராஜன்(71). இவரது மகன் மணிகண்டன். பலசரக்கு கடை மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளார். வியாபாரத்தை விரிவுபடுத்த பழனிச்சாமி என்பவரிடம் கடன் பெற்றுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ja2sgwc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர், ரூ. 6 லட்சம் கடன் பெற்ற நிலையில் 64 லட்ச ரூபாய் திருப்பி தர வேண்டும் என கந்துவட்டி கும்பல் கேட்டுள்ளது.இதனை தர முடியாமல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நடராஜன் மற்றும் அவரது மகன் சென்று விட்டனர். இன்று காலை பழனிச்சாமி ஆதரவாளர்கள் நடராஜனை காரில் கடத்தியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.விசாரித்த போலீசார், நடராஜனை சீர்காழியிலிருந்து கடத்தி கடலூர் அருகே வரும்போது கும்பலை மடக்கி பிடித்தனர்.வாங்கிய கடனை, மகன் திருப்பி தராத காரணத்தினால் நடராஜனை கடத்திய அக்கும்பல் உடல் முழுவதும் கடுமையாக உதைத்து தாக்கியதுடன் கைவிரலையும் துண்டித்தது தெரியவந்தது.இதனையடுத்து அவரை போலீசார் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது தெரியவந்தது. நடராஜனை தாக்கிய ஐந்து பேரை கடலூர் முதுநகர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

டண்டனக்கா
ஜூலை 01, 2025 08:44

அண்ணா இது சிறுத்தைகள் தொகுதி. எங்கள யாரும் அசைக்க முடியாது... ஹி ஹி


Natarajan Ramanathan
ஜூலை 01, 2025 06:06

நான் பத்துலட்சம் கடன் கொடுத்தேன். மாத வட்டி ரூ. 7500 மட்டுமே. அதாவது வருடம் ஒன்பது சதவீதம். அதை வாங்கிய உறவினர் இந்த வட்டியைக்கூட ஒழுங்காக தராமல் கழுத்தை அறுக்கிறார்


Mani . V
ஜூலை 01, 2025 04:30

எழவு மாடல் புதுசா எதுவோ சட்டம் போட்டானுங்களே, அது இவன்களுக்கு பொருந்தாதா?


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 30, 2025 23:13

கட்டுமர பல்கலை மாணவன் போல, 6 லக்சம் 64 லக்சம் ஆயிடுச்சி


தாமரை மலர்கிறது
ஜூன் 30, 2025 21:56

திமுகக்காரர்கள் கந்துவட்டி மாபியா கும்பல்.


தமிழ் நாட்டு அறிவாளி
ஜூன் 30, 2025 21:47

இதில் மணிகண்டன் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க கூடாது என மிக தெளிவாக இருந்துள்ளார். பணம் வாங்கிக்கொண்டு வாங்கிய பணத்தை சொன்னபடி திருப்பி கொடுக்கவில்லை. வங்கியில் கடன் வாங்கி இருந்தால் ஒழுங்காக திருப்பி கொடுப்பார்கள். வங்கியில் வாங்க தகுதி இல்லாதவர்கள் தெரிந்தவர்களிடம் வாங்கி விட்டு இது போல் ஏமாறுகிறார்கள். பணம் கொடுத்தவர்கள் எதாவது செய்யும் வரை அமைதியாக இருப்பார்கள். அவர்கள் எதாவது செய்தால் என்னை அதிக வட்டி கேட்டு துன்புறுத்துகிறார்கள் கூறுவது. போலீஸ் கம்ளைண் கொடுத்தாலும் எடுக்க மாட்டார்கள். ஆகவே பணம் யாரிடமும் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அவர்கள் நினைத்தால் ஒழிய உங்களால் திருப்பி வாங்க இயலாது.


Mecca Shivan
ஜூன் 30, 2025 20:49

இவனுங்க எந்த கழகம் ???


Ramesh Sargam
ஜூன் 30, 2025 20:27

தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை. அராஜகம்தான் தினம் தினம் நடக்கிறது. மக்களை காப்பாற்ற தெரியாத அரசு இருந்து என்ன பயன்?


MARAN
ஜூன் 30, 2025 19:21

இதுதாண்டா திராவிட மாடோல்


yts
ஜூன் 30, 2025 19:18

கடத்தியவர்கள் பெயரை வெளியிடலாமே


V Venkatachalam
ஜூன் 30, 2025 20:58

ஒய் டி எஸ். நீங்க தைரியமா கேட்டுப்புட்டீக. பதில் இருக்கு. அத சொல்லுவதற்கு தைரியம் ன்னு ஒண்ணு வேணும். அதுதான் மிஸ்ஸிங். புலீஸு தரப்பிலேயே அத ராக்கெட்டில் ஏற்றி அனுப்பிட்டாக. திருட்டு தீய முக ன்னா அப்புடியே அதிருமில்ல..


முக்கிய வீடியோ