உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மல்லை சத்யாவை நீக்க கோரி தீர்மானம் நிறைவேற்றாதீர் என வைகோ கண்டிப்பு

மல்லை சத்யாவை நீக்க கோரி தீர்மானம் நிறைவேற்றாதீர் என வைகோ கண்டிப்பு

சென்னை : 'கட்சி கட்டுப்பாட்டிற்கு எதிராக, கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.ம.தி.மு.க.,வில், அக்கட்சியின் முதன்மை செயலர் துரை வைகோவுக்கும், துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யாவுக்கும் இடையே, கோஷ்டி மோதல் தீவிரம் அடைந்துள்ளது. மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடந்த ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு, தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாக உள்ள மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள், கண்டனம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க.,வில் வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், துரை வைகோ, மல்லை சத்யா என, இரண்டு அணிகள் உருவாகி உள்ளன. இருவரையும் சமாதானப்படுத்தும் பணியில், வைகோ ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டம், வரும் 20ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கூட்டத்தை கூட்டி, தீர்மானங்கள் நிறைவேற்றிய செய்திகள் வந்துள்ளன. கட்சி கட்டுப்பாட்டிற்கு எதிராக, இத்தகைய கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது என, அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 15, 2025 12:26

வைகோவின் நிலைப்பாட்டை ஆதரித்து கையில் பதாகை ஏந்தி இலட்சக்கணக்கான டி ராஜேந்தர் மற்றும் பாக்யராஜ் கட்சி தொண்டர்கள் ஊர்வலம்


Ramalingam Shanmugam
ஏப் 15, 2025 11:03

சௌக்கியமா உங்கள் கட்சியில் உறுப்பினர் இருக்காங்களா


Yes your honor
ஏப் 15, 2025 10:42

யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்காக இந்த வயோதிகர் டீ ஆற்றிக் கொண்டுள்ளார்? இந்த வைகோ தமிழகத்திற்கு இதுவரை என்ன நன்மைகளை செய்துள்ளார்?


Barakat Ali
ஏப் 15, 2025 10:20

குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் பெறாத அரசியல் கட்சிகளைத் தேர்தல் ஆணையம் தடை செய்யவேண்டும் .....


Rajarajan
ஏப் 15, 2025 10:09

இந்த ஆளை வெளியே விட்டால் ஆபத்து, என்பதனால் தான் தி.மு.க. கூட்டணியில் வைத்துள்ளது. இவருக்கும் தி.மு.க. வின் மோசடி மற்றும் சில நிகழ்வுகளின் ஆதாரம் உள்ளதாக, மிரட்டி பணியவைக்கிறார். ஜாடிக்கேத்த மூடி.


angbu ganesh
ஏப் 15, 2025 09:30

ஏன் ...பத்தி ஏதும் சொல்லல நீங்க இன்னும் ஒரு அரவேக்காடுதான்


VENKATASUBRAMANIAN
ஏப் 15, 2025 08:10

இது ஒரு கட்சி. இன்னுமா இவரை நம்புகிறீர்கள்.


Svs Yaadum oore
ஏப் 15, 2025 07:15

தமிழ் இன துரோகி ....


Svs Yaadum oore
ஏப் 15, 2025 07:02

தமிழ் தமிழன் என்று சொல்லி வயிறு வளர்த்த இன துரோகி ..இவர் கட்சி ஆரம்பித்தபோது தீக்குளித்து இறந்த தொண்டர் சாபம் சும்மா விடாது .....இலங்கை தமிழர் நாடு இழந்து ஏதலி களாக இனம் அழிய துணை போன கடைந்தெடுத்த துரோகிகள் கூட்டம் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 15, 2025 06:34

வாரிசு அரசியலை எதிர்த்து டீம்காவில் இருந்து வெளியேற்றப்பட்டாய் .... அதுவும் கொலை முயற்சிப்பழி சுமத்தப்பட்டு .....


சமீபத்திய செய்தி