உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நன்றி மறந்தவர் வைகோ: அ.தி.மு.க., கடும் விமர்சனம்

நன்றி மறந்தவர் வைகோ: அ.தி.மு.க., கடும் விமர்சனம்

சென்னை: வைகோ நன்றி மறந்தவர் என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்தார்.சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நடந்த, ம.தி.மு.க., கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ, 'கடந்த 2006 சட்டசபை தேர்தலின்போது, திருச்சி தி.மு.க., மாநாட்டிற்குச் செல்லாமல், போயஸ் கார்டன் சென்று, ஜெயலலிதாவை சந்தித்தது, அரசியல் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு' என, கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:கடந்த 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க.,வுக்கு, மூன்று எம்.பி.,க்கள் கிடைத்தனர். அதற்கு முன், ம.தி.மு.க.,வுக்கு எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கிடையாது. ம.தி.மு.க.,வுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைத்ததற்கே, ஜெயலலிதாதான் காரணம். இந்த நன்றியை மறந்து விட்டு, கொஞ்சம்கூட வாய் கூசாமல் வைகோ பேசுவது நல்லதல்ல. தி.மு.க.,வைப் பற்றி, வைகோ சொல்லாத வார்த்தைகளே இல்லை. தி.மு.க.,விலிருந்து பிரிந்தபோது, ம.தி.மு.க., தொண்டர்கள் தாக்கப்பட்டனர். அப்போது வைகோ, 'இனி ம.தி.மு.க., தொண்டர்கள் மீது கை வைத்தால், உங்கள் வீட்டுப் பெண்கள் வெள்ளைச் சேலை கட்டும் நிலை வரும்' என்றார். அப்படியெல்லாம் சொல்லி விட்டு, தற்போது, தி.மு.க.,விடம் ஏதோ எதிர்பார்த்து நிற்கும் அவல நிலையில் இருக்கும் வைகோ, அதற்காக அ.தி.மு.க., செய்த உதவியை மறக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

விஜய்க்கு ஆதரவாக குரல்

ஜெயகுமார், நேற்று பேட்டியளித்தபோது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசினார். ஜெயகுமார் கூறுகையில், “மீன்பிடி படகுகளில் கட்டப்பட்ட த.வெ.க., கொடிகள் மட்டும் அகற்றப்பட்டது கண்டிக்கத்தக்கது. படகுகளில் அரசியல் கட்சிகளின் கொடியை அகற்றுவதாக இருந்தால், தி.மு.க., கொடியையும் அகற்ற வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 12, 2025 08:57

வைகோ அடிக்கடி கூட்டணிமாறுவதை கண்ட பச்சோந்திகள் தங்களால் வைகோ அளவிற்கு விரைவாக நிறம்மாற முடியால் போனதால் வெட்கி, கூனி, குறுகி தங்களை தாங்களே இனப்படுகொலை செய்துகொண்டு மாண்டுபோயின .. பச்சோந்தி என்ற இனமே தமிழ்நாட்டில் இல்லாமல் அழித்து போனதற்கு காரணம் வைகோதான் ..


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 12, 2025 08:20

வைகோவிற்கு நன்றி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது ..புரியாது ...முதன்முதலில் மதிமுக சார்பில் பாராளுமனறத்திற்கு எம்பிக்களை அனுப்ப உதவிசெய்த்து ஜெயலலிதாவும் ..அதிமுகவும் .. அதை அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை ஒரே ஜம்பாக ஜம்மி திமுக கூட்டணிக்குள் சென்றுவிட்டார் .. அப்புறம் திமுக கூட்டணியிலிருந்து ஒரே லாங் ஜம்ப் செய்து அதிமுக கூட்டணிக்கு வந்தார் .. அப்புறம் ஜாம் பண்ண இடமில்லாமல் மநகூ ஆரம்பித்தார் ..அப்புறம் அதிலிருந்தும் ஜம்ப் செய்து திமுகவிற்குப்போய் ..இப்போது தாயகத்திலிருந்து அறிவாலயத்திற்கு ஜூட் விட்டுவிட்டார் ...இப்போது அறிவாலய வாட்ச்மேனுக்கு நிகராக அறிவாலயத்தை காவல் பார்க்கிறார் .இங்கிருந்து எங்கு ஜம்ப் பண்ணபோகிறார் என்று அவருக்கே தெரியவில்லை ....இந்த லெக் தாதாதான் விடுதலை புலிகளை கூண்டோடு முடித்தவர் ..


Arul Narayanan
ஜூலை 12, 2025 07:52

1998ல் தாயகம் கமலாலயம் பாமக அலுவலகம் என்று ஒவ்வொரு இடமாக ஜெயலலிதா விசிட் செய்து கூட்டணியை அமைத்தார். அன்று சம்மந்தப்பட்ட எல்லோருக்கும் அது தேவைப்பட்டது. 2006லிருந்து அதிமுக ஆதரவிலிருந்து இம்மியும் பிசகாமல் இருந்த வைகோவை 2011ல் சந்திக்காமல் உதாசீனம் செய்தாரே. அதற்காக தான் வைகோ வருத்தப்படுகிறார்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 12, 2025 09:35

நண்பரே வைகோபோல் ஒருபோராளியை இனி தமிழகம் காணப்போவதில்லை ..அவர் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடியதைப்போல் இனிமேல் யார் போராடுவார்கள்? .. தமிழக மீனவர்களுக்காக , இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பாராளுமற்றதில் எரிமலையாய் கொந்தளித்தார் வைகோ .தன் உயிரை பற்றி கவலைப்படாமல் இலங்கை சென்றுவந்து தமிழீத்தின் உண்மை நிலவரத்தை இந்தியாவிற்கு தெரிய செய்தார் .. வைகோவின் பாராளுமற்ற உரையை கேட்க மக்களைவை உறுப்பினர்கள் கூட பார்வையாளர்கள் வரிசையிலிருந்து ரசித்து கேட்பார்கள் .. இந்திராகாந்தி புகழ்ந்து பேசிய ஒரே தமிழக எம்பி வைகோதான் ..வாஜ்பாய் வைகோவை தன மகன் என்றுதான் கூப்பிடுவார் .. இவ்வளவு ஆற்றல்கள் இருந்தும் தன சஞ்சல புத்தியால் அரசியல் கூட்டணி மாறிக்கொண்டிருந்தார் .. சரியான நேரத்தில் தவறான அரசியல் முடிவுகள் எடுத்தார் ,... எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் கருணாநிதியிடமா கூட்டணி சேர்ந்தார்? கடைசிவரை கருணாநிதியை ஜென்ம விரோதியாக கருதினார் மக்கள் வாக்களித்தனர் ,,வைகோ என்ன செய்தார்? மீண்டும் கருணாநிதியுடன் கூட்டுசேர்ந்தார் .தொண்டர்களின் நம்பக தன்மையை இழந்தார் .. தொண்டர்களை இழந்து இப்போது இந்த அவமானத்தை சந்திக்கிறார் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை