வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Valparai is the place for everything wherein people can wholeheartedly enjoy all climate and the place is for peace fullness coupled with happiness
வால்பாறை:: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால், வால்பாறையில் சுற்றுலா பயணியர் திரண்டுள்ளனர்.பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால், வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள காட்சி முனைப்பகுதி, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட இடங்களில், மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.மலைப்பாதையில், வரையாடு, சிங்கவால்குரங்குகள், யானைகள், காட்டுமாடு, உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு ரசித்தனர். மேலும், வால்பாறை தாவரவியல் பூங்காவை சுற்றிப்பார்த்து, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.வால்பாறையில், பனி மூட்டத்துடன் குளுகுளு சீசன் நிலவுவதால், குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளோர் மகிழ்ச்சியடைந்தனர்.
Valparai is the place for everything wherein people can wholeheartedly enjoy all climate and the place is for peace fullness coupled with happiness