உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு நிவாரணத் தொகையில் லஞ்சம்: கல்நெஞ்சம் கொண்ட விஏஓ கைது

அரசு நிவாரணத் தொகையில் லஞ்சம்: கல்நெஞ்சம் கொண்ட விஏஓ கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மழையால் மாடு இறந்ததில் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவரிடம் லஞ்சம் பெற்ற விஏஓ கைது செய்யப்பட்டார்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் கேணிக்கரை தோப்பு தெரு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் பிரகாஷ்.30. இவருக்கு சொந்தமான பசுமாடு சமீபத்தில் பெய்த மழையில் இறந்தது. இறந்த மாட்டிற்கு அரசு அளித்த நிவாரணத் தொகை ரூ. 30,000 பிரகாஷின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிவாரணத்தை பெற்றுக் கொடுத்ததற்கு, தனக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் சேர்த்து 3000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று மேமாத்தூர் கிராம நிர்வாக உதவியாளர் பாஸ்கரணி கேட்டுள்ளார். இது குறித்து பிரகாஷ் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற போலீசாரின் அறிவுறுத்தலின்படி இன்று ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் பிரகாஷ் விஏஓ அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த விஏஓ ஜெயபிரகாஷிடம் பணத்தைப் கொடுத்துள்ளார். விஏஓ அதனை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் அருள் பிரியா மற்றும் போலீசார் விரைந்து வந்து ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துடன், ஜெயபிரகாஷை கைது செய்தனர். தலைமறைவான உதவியாளர் பாஸ்கரணியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

V. MANI
டிச 20, 2025 15:36

இதுபோன்ற லஞ்சம் சம்மந்தமான செய்திகள் தினமும்தான் வந்து கொண்டிருக்கிறது. நீங்களும் போட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்கள். நாங்களும் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதைத்தடுக்கவேண்டியவர்களுக்கும் பாதி போய் சேர்வதால் அவர்களும் இதை படித்துக்கொண்டிருக்கிறார்களா


D.Ambujavalli
டிச 20, 2025 06:24

அவர் பதவியின் லெவலுக்கு 3000 வாங்கினார். பெரிய பெரிய ஒப்பந்தங்களில் அமைச்சர் முதல் கட்டிங், கமிஷன் என்று லட்சக்கணக்கில் வாங்குவதை எந்த லஞ்ச ஒழிப்புத் துறையும் பிடித்ததாக சரித்திரம் இல்லை அவர்கள் வாங்குவதில் எத்தனை சதவீதம் இந்தத் துறைக்கு ஒதுக்கப்படுகிறதோ ?


Sekar Times
டிச 19, 2025 19:47

லஞ்சம் ஊழல் குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்


G Mahalingam
டிச 19, 2025 19:06

லஞ்ச ஒழிப்பு துறை Proposes அமைச்சர்கள் Disposes with commission .3 மாதத்தில் வேலைக்கு மீண்டும் சேர்ந்து விடுவார்கள்.


D Natarajan
டிச 19, 2025 19:04

உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்


R. THIAGARAJAN
டிச 19, 2025 18:48

இவர்கள் இப்படியே போனால் எங்கே போவார்கள் - மேல் விசாரணையை தவிர்த்து, இவர்களின் வேலைக்கு தகுதியுள்ள மற்ற எழதாதர்களுக்கு நிபந்தனையோடு இவர்களின் பணியை கொடுக்க, நீதிமன்றம் ஆணையிட வேன்டும்- லஞ்சம் என்பது முதல் தர கொடுங்குற்றம் என்பதை உயர்த்தினால் மட்டுமே இதற்க்கு தீர்வு அதுவரை ஊடங்களுக்கு செய்திகள் மட்டுமே பலன்


Barakat Ali
டிச 19, 2025 18:24

இப்படிப் பலர் கைதாகிறார்கள் ....... அதன்பிறகு விசாரணை நடந்ததா ???? தண்டனை கிடைத்ததா ???? தெரியாது ..... இருட்டறையில் ஒரு மாதம் சோறு தண்ணியில்லாமல் அடைக்க வேண்டும் .... பணக்கட்டுகளுடன் .....


சிட்டுக்குருவி
டிச 19, 2025 18:16

எவ்வளவோ சட்டமீறல்கள் லஞ்சலாவண்யங்கள் அரசு சொத்துக்கள் களவாடல்கள் மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை பார்க்கின்றோம் .கருத்தை பதிவிடுகின்றோம் .ஆனால் இதையேயெல்லாம் ஒழிப்பதற்கு நாம் எந்தமுயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை .ஒருகை ஓசையாகவே இருக்கின்றது .நாமெல்லாம் ஒன்றுசேருவது எப்போது ? கட்சிகளுக்கப்பாற்பட்டு மக்கள் நலம்கருதி பணிசெய்யும் குழு இருந்தால் இங்கு தெரிவியுங்கள் இணைவதற்கு .


S SRINIVASAN
டிச 19, 2025 18:08

தீயசக்தி மாடல் அரசு.


VRm
டிச 19, 2025 18:05

லஞ்ச ஒழிப்புத்துறையானது வரும் காலங்களில் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுக்களை கொடுப்பதற்கு பதிலாக அந்த்ராக்ஸ் கிருமி கலந்த நோட்டுக்களை வழங்கினால் இந்த லஞ்சப்பேய்கள் உடனடியாக செத்து ஒழியும். அரசுக்கும் வழக்குசெலவீனங்கள் குறையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை