உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்லடத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

பல்லடத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: பல்லடம் அருகே சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவுக்குட்பட்ட கே.அய்யம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரேவதி,44. இவரிடம் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி பல்லடம் ஊராட்சி ஒன்றி ய அலுவலக ஒப்பந்ததாரர் கதிர்வேல் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இதனை பெற்ற வி.ஏ.ஓ., ரேவதி, சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் வழங்க விரும்பாத கதிர்வேல், இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழங்கிய ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வி.ஏ.ஓ.,விடம் கதிர்வேல் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வி.ஏ.ஓ., ரேவதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, லஞ்ச பணத்தை பதுக்கி வைத்துள்ளாரா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

N Srinivasan
மார் 21, 2025 20:15

பாரதி கனவு கண்ட புதுமைப்பெண்கள். அவர் இருந்திருந்தால் சுட்டுக்கொன்று இருப்பார்.


Venkateswaran Rajaram
மார் 21, 2025 18:11

இவள் கொள்ளை அடிக்கவேண்டும் என்றே கஷ்டப்பட்டு படித்து வந்தவள் போல் தெரிகிறது ...நெற்றியில் பட்டை வேறு ...


Vijay D Ratnam
மார் 21, 2025 17:22

அடடா சூப்பர், தமிழ்நாடு புனிதமடைந்துவிட்டது 15 ஆயிரம் ரூவா லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். இங்கே அடுத்தவேளை சோத்துக்கு வழியில்லாமல் ஈரத்துணியை வயித்துல கட்டிக்கிட்டு பொழப்புக்காக திருட்டு ரயிலேறி பட்டினத்துக்கு வந்து அரசியலில் இறங்கி சர்வசாதாரணாமாக 15 லட்சம் கோடி ரூவா அளவுக்கு கொள்ளையடிச்ச உலகத்துக்கே தெரிஞ்ச குடும்பம் இருக்குது. எங்க, அந்த வீட்டு கேட்டை தொடச்சொல்லுங்க பார்ப்போம்.


SUBRAMANIAN P
மார் 21, 2025 17:19

அதிகாரிகள் லஞ்சம் வாங்குனா கழுவி ஊத்துறீங்க. அதுவே ஊழல் அரசியல்வாதி ன்னு தெரிஞ்சும் அவனுக்கே ஓட்டுப்போட்டு மந்திரி ஆக்குறீங்க. என்னாடா உங்க லாஜிக்கு ..


अप्पावी
மார் 21, 2025 15:35

வாங்குனதுதான் வாங்குன 15 லட்சமா வாங்கக் கூடாது? பின்னாடி மாட்டிக்கிட்டாலும் 15 லட்சம் வாங்குற மாதிரி நடிச்சேன்னு சொல்லி தப்பிச்சுக்கலாமே. இந்தில கூட சொல்லலாம்.


Raj
மார் 21, 2025 15:09

ஒரு வி ஏ ஓ க்கு ₹ 15,000/- கூடவா வீட்டில் கஷ்டம். பணம் யாரை விட்டது.


Barakat Ali
மார் 21, 2025 19:07

கஷ்டமா ???? யாரு சொன்னா ???? மாண்புமிகு வரைக்கும் பங்கு போகும் ....


Chandrasekaran Balasubramaniam
மார் 22, 2025 18:20

இது மாதிரி எவ்ளோ 15000 வாங்கியிருப்பா. இதன் பின்னணியில் பங்கு போடுகிறாவனெல்லாம் தப்பித்து இவள ஜாமீன் எடுத்து வேறு ஊருக்கு மாற்றம் செய்வானுக. மறுபடியும் இது தொடரும்.


நாஞ்சில் நாடோடி
மார் 21, 2025 14:30

தமிழ்நாட்டில் மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி ...


kulandai kannan
மார் 21, 2025 13:58

இழி பிறவிகள். அரசு ஊழியர்களின் அதிகாரங்களைக் குறைப்பதுதான் ஒரே வழி


புதிய வீடியோ