உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யம்பாளையத்தில் கூலித்தொழிலாளியிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அதேபோல், குன்றத்தூர் அருகே பட்டா வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ ராபர்ட் ராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஒ) ஆக ரமேஷ்(47) பணியாற்றி வருகிறார். அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி கார்த்திகேயன்(37) என்பவர் தனது நிலத்தைசர்வே செய்து பெயர் மாற்றத்துடன் பட்டா கேட்டு விஏஓ.,விடம் விண்ணப்பித்தார்.இதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என ரமேஷ் கேட்டுள்ளார். பணம் கொடுக்காததால் 3 முறை கார்த்திகேயன் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு ரூ.2,500 லஞ்சம் தருவதாக கூறிய கார்த்திகேயன் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.அவர்கள் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூ.2,500 பணத்தை விஏஓ அலுவலகத்தில் வைத்து ரமேஷிடம் கார்த்திகேயன் கொடுத்தார். அங்கு மறைந்துஇருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீசார் ரமேஷை கைது செய்தனர். லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடக்கிறது. விஏஓ அலுவலகத்தை மூடி விசாரணை நடக்கிறது.

ரூ.30 ஆயிரம் லஞ்சம்

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் ரவி ராஜ் என்பவர் பட்டா பெறுவதற்காக விஏஓ ராபர்ட் ராஜை அணுகினார். இதற்கு ரூ.80 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என விஏஓ கேட்டார். பிறகு பேரம் பேசி ரூ.30 ஆயிரம் வாங்கிய போது, ராபர்ட் ராஜை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sathya Gold
ஆக 08, 2025 06:35

பட்டா அவர்கள் சம்பாதித்த காசில் வாங்கி அதை அரசிடம் தெரிவித்தால் இதற்கு எதற்கு லஞ்சம், பிறந்த தேதி சான்றிதழில் மாற்றம் செய்யவே லஞ்சம், இனி ஒருவர் லஞ்சம் வாங்க தனது வேலையை சரி வர செய்யாமல் இருக்க பயன்படும்படி செய்ய வேண்டும். இன்னும் இவர்களை பற்றி அனைத்து விவரங்களுடன் அனைத்து பத்திரிகைகளிலும் பிரசுரிக்க வேண்டும்


David DS
ஆக 07, 2025 22:17

தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட் கோவில்பட்டி தாலுகாவில் டிப்டி தாசில்தார் கிட்ட லஞ்சம் பாலாக ஓடுது.


Jayaraman
ஆக 07, 2025 21:18

லஞ்சம் வாங்குவதை மட்டுமே குற்றமாக கருத வேண்டும். லஞ்சம் கொடுப்பதை குற்றமாக கருதக்கூடாது. அப்படி இருந்தால்தான் லஞ்சம் கொடுத்ததை வெளியில் தைரியமாக கூற முடியும்.


தமிழன்
ஆக 07, 2025 19:39

வருவாய் துறை மூலம் அரசுக்கு வருவாய் வரிகிறதோ இல்லையோ...... பட்டா என்ற பெயரில் பகல் மற்றும் இரவு கொள்ளை நடக்கிறது 24 மணி நேரமும் கொள்ளை


Marimuthu Kaliyamoorthy
ஆக 07, 2025 21:53

pani neekkam seiyavum.


S.jayaram
ஆக 08, 2025 14:32

எங்கும் காசில்லாமல் எதுவும் நடக்காது, காசில்லாமல் கல்லறைக்கு பிணம் போகாது அங்கும் காசு வேண்டும்


தாமரை மலர்கிறது
ஆக 07, 2025 18:58

அமைச்சர் கலெக்டரை லஞ்சம் கொடுக்க சொல்கிறார். கலெக்டர் தாசில்தாரை லஞ்சத்திற்காக மிரட்டுகிறார். தாசில்தார், பட்டா ரிஜிஸ்டர் மற்றும் வி எ ஓ வை மிரட்டுகிறார். பட்டா ரிஜிஸ்டரும் , வி எ ஓ ம் மக்களை மிரட்டி லஞ்சம் பறிக்கிறார் . இது ஒரு செயின் ரியாக்ஷன் போன்று செயல்படுகிறது. லஞ்சம் வாங்குபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பது தான் சரியான தண்டனையாக அமையும். அப்படி எனில், முதலில் அமைச்சருக்கு தான் கொடுக்க வேண்டும். அவருக்கு கொடுத்தால், லஞ்சம் ஒழியும்.


RSaminathan - Thirumangalam
ஆக 07, 2025 17:25

லஞ்சத்தின் ஊற்றுக்கண் இந்த திருட்டு வி ஏ ஓ க்கள் தான், அப்புறம் சர்வேயர், ஆர் ஐ, தாசில்தார்… வருவாய் துறை அசிங்கமான துறை


பாரத புதல்வன்
ஆக 07, 2025 17:12

ஆகா.... அமைச்சர் பெரிய கடவுள் தொகுதியிலேயா லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.... திராவிட மாடலுக்கு ஒரு மகுடம் இந்த கிராம நிர்வாக அலுவலர்....


சமீபத்திய செய்தி