உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நத்தம்: பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் பண்ணபட்டியை சேர்ந்த மகேஸ்வரன் என்ற விவசாயி, பட்டா மாறுதலுக்காக கடந்த சிலநாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார்.இது தொடர்பாக சிலுவத்தூர் வி.ஏ.ஓ., முகமது ஜக்காரியாவை, மகேஸ்வரன் அணுகினார். பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என முகமது ஜகாரியா கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மகேஸ்வரன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.அவர்களின் அறிவுரையின்படி மகேஸ்வரன் கொடுத்த ரூ.2,500 லஞ்சப்பணத்தை, முகமது ஜக்காரியாவை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhaskaran
ஏப் 30, 2025 10:39

இன்றைய லஞ்சாப கேசன்கள் என்று ஒரு பக்கத்தில் கட்டம் கட்டி படத்துடன் தினசரி செய்தி போடனும் அப்போதாவது ஒருவேளை இவனுக திருந்தலாம்


Barakat Ali
ஏப் 29, 2025 21:50

பணத்தை மட்டும் சாப்பிடக் கொடுங்கள் ...


Srinivasan Ramabhadran
ஏப் 29, 2025 20:31

இது போன்ற ஒரு செய்தி தினமும் வருகிறது. ஆனால், இவர்கள் எல்லோரும் குறைந்த அளவு லஞ்சம் வாங்கிய நபர்கள். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயல்தான்.இருந்தும் ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் சொத்து/ மனை அமைந்து இருக்கும் இடம் மற்றும் சொத்தின் மதிப்பு பொறுத்து லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கின்றனர். இதற்கு என்று இடைத் தரகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் நேராக அலுவலர்களை அணுகினால் உங்கள் வேலை நடக்காது. இதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. This is a secret.


RamKumar ramanathan
ஏப் 29, 2025 18:40

VAO must be dismissed immediately


rajan
ஏப் 29, 2025 18:05

it looks like happening in cinema or tv serials. concerned VAO neveraccepts money in office. He may take several ways.


முக்கிய வீடியோ