உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது

பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்: பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(38). அவரது தந்தையின் பெயரில் உள்ள நிலத்தில் தனது பெயரை சேர்க்க காட்டூர் விஏஓ ஜெயக்குமாரிடம்(51) விண்ணப்பம் செய்தார்.இதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஜெயக்குமார் கூறினார். அதனை கொடுக்க விரும்பாத ராமமூர்த்தி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.அவர்கள் அறிவுரைப்படி ராமமூர்த்தி ரூ.17 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அதனை வாங்கிய ஜெயக்குமாரை அங்கு மறைந்திருந்த திருப்பூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

rama adhavan
அக் 30, 2025 23:02

ஒரு வி ஏ ஓ லஞ்சம் வாங்கி ஆர் ஐ, கிளார்க், டீ டி, தாசில்தார், ஆர் டீ ஓ வரை கவனிக்க வேண்டும். ஜமாபந்தி, தணிக்கை என்றால் ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டும். எங்கே அவன் போவான்? லஞ்சம் தான் ஒரே வழி. இது அரசியல்வாதிகள், மந்திரிகள், லஞ்ச ஒழிப்புத் துறை அனைவருக்கும் தெரியும். நானும் நேர்மை எனக் காட்ட இப்படி சில ரைடுகள் விடுவார்கள். மாட்டியவன் பலிகடா. லஞ்சம் எப்போதும் அழியாது. புது வழிகளில் தொடர்கதையாகும்.


rama adhavan
அக் 30, 2025 21:16

லஞ்சம் இல்லாத துறை தமிழ்நாட்டில் பரிசல்துறை தான். அதுவும் இப்போது இல்லை.


ராஜா
அக் 30, 2025 20:04

இவனுங்க ஆசை எல்லாம் எப்படி நிறைவேறும்


Murugan
அக் 30, 2025 19:08

in Tamilnadu you cannot identify a single VAO whose hands are clean. Further, there is a well defined sharing pattern to share the bribe. unfortunately the VAOs are made scapegoats


சாமானியன்
அக் 30, 2025 19:07

ஒரு ரூபாய் கேட்டாலும் லஞ்சம் லஞ்சமே.


Natchimuthu Chithiraisamy
அக் 30, 2025 18:58

தொடர்ந்து கைது என்கிற செய்தி வந்து கொண்டே இருக்கிறது பணியில் இருப்பவர்கள் எப்படி தப்பு செய்கிறார்கள் இல்லை லஞ்ச பணத்தை ஏன் மறைமுகமாக வாங்குவதில்லை. கைதுக்கு பின்னால் 60 நாள் கழித்து வெளீயே வந்து விடலாம் 15 நாள் காவல் துறை கையெழுத்து பிறகு வெளியே தான் இருக்க போகிறார்கள் வழக்கு முடிய 10 ஆண்டுகள் ஆகும் அதுவரை வேலைக்கு போக முடியாது ஆனால் நான் எந்த வேலையும் செய்ய வில்லை என்று அலுவலகத்தில் எழுத்து மூலமாக சொன்னால் போதும் சம்பளம் அரசு கொடுத்து விடும் கொடுத்து ஆக வேண்டும். 2003 பின் பெனிபிட்ஸ் அதிகம் இல்லை எனவே கடைசியாக வரும் 40 லட்சம் 2003 க்குள் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு தான் பொருந்தும். அதனால் பயமில்லை. இந்த போலீஸ் செயலினால் அரசுக்கு ஒரு ஆள் போச்சு.


Saai Sundharamurthy AVK
அக் 30, 2025 18:28

அரசு ஊழியர்கள் எல்லாமே லஞ்சப் பேர்வழிகளாகத் தான் இருக்கிறார்கள். காணாமல் போன பைல்கள் கூட லஞ்சம் கொடுத்தால் கிடைத்து விடுகிறது எப்படி ????? கோர்ட், கேசு, வக்கீல், நீதிபதி, தீர்ப்பு இதெல்லாம் நேர விரயம், கால விரயம் மற்றும் வெறும் மாயாஜாலம் போல் தான் தெரிகிறது.


MUTHU
அக் 30, 2025 19:52

DMK நிர்வாக உத்தியே ஊழலை பரவலாக்கம் செய்து ஆட்சி செய்வது தான். ஆட்சி செய்யும் MLA MP மட்டும் சம்பாதிப்பது தான் பழைய உத்தி. இங்கே அரசு ஊழியர் மட்டுமல்ல போலீஸ், நீதித்துறை, ஆசிரியர், தனியார் மருத்துவத்துறை, தனியார் கல்வித்துறை, தொழிற்துறை என்று எல்லாவற்றிலும் ஊழலை கண்டுகொள்ளாது திமுக.


GMM
அக் 30, 2025 18:04

வருவாய் துறையில் லஞ்சம் உண்டு. லஞ்சம் இல்லாத தமிழக துறை இருக்காது. குறிப்பாக, அதிக அளவு வீ. ஏ. ஓ. கைது செய்யப்பட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு மற்றும் வருவாய் துறை நிழல் யுத்தம் காரணமா? அல்லது ஆளும் கட்சி போலி பட்டா கட்டளையை ஏற்க வில்லையா? திமுகவினர் கைமாறும் வரை உழுதல் நிலம் சொந்தம், வாடகை இருந்தால் வீடு சொந்தம், அரசு, புறம்போக்கு, கோவில் நிலம் சொந்தம் என்று பட்டா போட்டு தர மறுக்கிறீர்களா? மாநில அரசு துறை அனைத்து திமுகவினர்? கைது ஒரு தேர்தல் நாடகமா?


Barakat Ali
அக் 30, 2025 18:00

ராகுல் கூட ஒருவாரம் தங்க விடுங்க .........


சிட்டுக்குருவி
அக் 30, 2025 17:43

தினம் தினம் கைது நடந்தாலும் திருந்த மறுக்கிறானுங்க .ஊழலும் ஊறலும்தான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் .தலைவன் எப்படியோ தொண்டனும் அப்படியே .சாராயம் விற்க இருக்கும் ஆர்வத்தை ஊழல்கட்டுப்படுத்துவதில் காட்டினாள் லஞ்சம் குறையும் .மக்கள் சேவையை மத்தியப்படுத்தி centralized application center ,Both online and mail in அங்கிருந்து பிரித்து அனுப்பி நடவடிக்கைக்கு ஏற்பாடுசெய்தால் லஞ்சத்தை அறவே ஒழிக்கலலாம் .மக்கள் யாரும் சேவைக்காக மற்ற அரசு அலுவகங்களை நாடக்கூடாது .சேவையைப்பற்றிய தகவல்களை டெலிபோன்,email ,text மெசேஜ் மூலமாக சேவைமயத்தில்தான் பெறமுடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தவேண்டும் .இது ஏற்படுத்தப்பட்டால் மக்களுக்கு தடையில்லா சேவையும் கிடைக்கும் லஞ்சம் அறவே ஊழியம் .வேண்டுமென்றால் மாநிலத்தை மூன்று சேவை மையங்களாக பிரிக்கலாம் .


சமீபத்திய செய்தி