உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு சிறை

லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.,வுக்கு சிறை

கடலூர்: லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வுக்கு, கடலூர் கோர்ட்டில் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த சேவூரைச் சேர்ந்தவர் ரவி. இவரது உறவினர் மகேந்திரன். கடந்த 2007ம் ஆண்டு, பாம்பு கடித்து இறந்தார். இவர், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் இருந்ததால், இழப்பீட்டுத் தொகை வாங்க, ரவி வெண்கரும்பூர் வி.ஏ.ஓ., ரங்கநாதனிடம் இறப்புச் சான்றிதழ் கேட்டார். அதற்கு, வி.ஏ.ஓ., ரங்கநாதன், 1,750 ரூபாய் லஞ்சமாகக் கேட்டார். இது குறித்து, ரவி கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, போலீசார் அறிவுரையின்படி, கடந்த 2008ம் ஆண்டு அக். 20ம் தேதி ரவி, வெண்கரும்பூர் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த ரங்கநாதனிடம் 1,750 ரூபாய் கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரங்கநாதனை கைது செய்து, கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகநாதன், லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., ரங்கநாதனுக்கு, ஒரு ஆண்டு சிறையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து @நற்று தீர்ப்பு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை