உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரி: சொத்து மதிப்பு சான்று வழங்க 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., அமல ராணி மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுக்காவில் உட்பட்ட தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் அமல ராணி என்பவர் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருகிறார். இவரது உதவியாளர் பேபி. நெய்யூர் பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் மகன் ஆறுமுகம், 56, என்பவர் ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=btuag9bl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் தனது ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணத்தை காண்பித்து, ஒப்பந்த பணிகளை செய்ய சொத்து மதிப்பு சான்று கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதற்கு வி.ஏ.ஓ., அமலராணி ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். பேரம் பேசி ரூ.3 ஆயிரம் தந்தால், சொத்து மதிப்பு சான்று பெற பரிந்துரை செய்ய முடியும் என்று அமலராணி கறாராக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம் குமரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தல் படி, ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாய் பணத்தை வி.ஏ.ஓ.,விடம் ஆறுமுகம் வழங்கி உள்ளார். அவர் தனது உதவியாளர் பேபியிடம் கொடுக்க சொல்லி உள்ளார். உதவியாளர் பேபி லஞ்சம் பணத்தை வாங்கினார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சால்வன் துரை, லஞ்ச ஒழிப்பு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் உதவி உடன், லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளரை கையும், களவுமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Bhaskaran
ஏப் 03, 2025 14:30

ஆண்களுக்கு நிகராக நாங்களும் லஞ்சம் வாங்குவோமே


K.Ramakrishnan
ஏப் 02, 2025 22:22

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றான் எட்டயப்புரத்துக் கவிஞன் பாரதி. ஆண்களுக்கு நிகராக லஞ்சம் வாங்குவதற்கும் சுதந்திரம் உண்டு என்று துணிந்து விட்டார்களோ இந்த புதுமைப்பெண்கள்.. பாமர ஏழைகளிடம் பணம் பறிக்கும் இந்த அரசு ஊழியர்களுக்கு வெறும் இரண்டாண்டு, மூன்றாண்டு தண்டனை மட்டும் போதாது. அவர்களுக்குஎந்தவித பணப்பயனும், ஓய்வூதியமும் கிடைக்காத வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும். அப்போது கூட திருந்த மாட்டார்களோ?


lana
ஏப் 02, 2025 16:24

சரி vao லஞ்சம் கேட்டார். பிடித்து கொடுத்து விட்டார். அரசு ஒப்பந்தம் எடுக்க 40 % கேப்பாங்க அப்ப என்ன செய்வார். அப்பா வின் கட்சி காரர்கள் ஐ பிடித்து குடுப்பாரு ன்னு நம்பலாமா


Avm Velmani
ஏப் 02, 2025 19:00

Kadgikarargallai pedithu yarum kodugka maddarkal


M Ramachandran
ஏப் 02, 2025 15:02

ஜுஜுபி கேசை பிடிக்க தான் தமிழ் நாட்டு போலீசுக்கு உத்தரவு மலை முழுங்கி கேஸு பக்கம் கூட எட்டி பாக்க கூடாது


Amar Akbar Antony
ஏப் 02, 2025 14:52

தண்டனைக்குடியவர்களே


Appa V
ஏப் 02, 2025 18:15

பெயரில் சந்தேகம் இருந்தாலும் பிழையில்லாமல் எழுதறீங்க ..கருத்து எழுதும் போது கவனமா எழுதுங்க


Guna Gkrv
ஏப் 02, 2025 14:42

பட்டா ,சிட்டா கொடுக்க லச்சம் லச்சமாக பணம் வாங்குகிறார்கள் அதை யாரும் பிடிப்பது இல்லை அஞ்சு பத்து வாங்குவர்களை பிடித்து துன்புறுத்துகிறார்கள், பத்திர பதிவு மற்றும் பட்ட மாற்ற வாங்கும் லஞ்சத்தை போய் முதலில் புடியுங்கள்


Ramesh Sargam
ஏப் 02, 2025 14:32

இப்படி சம்பாதிப்பதும்.....


M S RAGHUNATHAN
ஏப் 02, 2025 14:28

இந்த கிராம நிர்வாக அதிகாரி இட ஒதுக்கீட்டின் கீழ் வந்தவராய் இருப்பார். உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் நீதி மன்றம் சென்றால் அதற்கு நீதிபதி தடை விதிக்கக் கூடாது. பிணை தரக் கூடாது. சிறையில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை வைத்து இருக்க வேண்டும்


C G MAGESH
ஏப் 02, 2025 15:12

நீதிபதிகள் மட்டும் என்னவாம், அதுவும் திராவிட மாடல் தான்.


ஆரூர் ரங்
ஏப் 02, 2025 14:16

அமலா என்றால் குற்றமற்றவள் எனப் பொருள். இவளைத் திருத்து


முக்கிய வீடியோ