உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலத்தை அளவீடு செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் விஏஓ!

நிலத்தை அளவீடு செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் விஏஓ!

சேலம்: சேலத்தில் நிலத்தை அளவீடு செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ ராமசாமி, 51, என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மகேந்திரன். இவரது வீட்டு மனை இடத்தை அளவீடு செய்து, தனி பட்டா பெற, ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது நிலத்தை அளவீடு செய்ய ரூ.25 ஆயிரம் வி.ஏ.ஓ., ராமசாமி லஞ்சம் கேட்டுள்ளார்.இதுகுறித்து, மகேந்திரன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து அவர்களின் அறிவுரைப்படி, விஏஓ ராமசாமி, 51, என்பவரிடம் ரூ.25 ஆயிரத்தை மகேந்திரன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஏஓ ராமசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

deva
செப் 24, 2025 06:53

அன்றாட பெறப்படும் மனுக்கள் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை ஆகிய கோப்பு நகர்வுகளை ஒளிவு மறைவு இல்லாமல் நுகர்வோருக்கு குறுந்தகவல் வாயிலாக தெரியபடுத்தும் வகையில் அலுவலக நடைமுறையை கணினிமயமாக்கினால் இவர்கள் அடங்குவார்கள். உதாரணமாக தபால் துறையில் பதிவு தபால் அனுப்பினால் அது போய் சேரும் வரை டிராக் செய்ய முடிகிறது,


Arul Nesaiah
செப் 23, 2025 16:11

செய்திகள் மிக அருமையாக உள்ளது நன்றி


RAM MADINA
செப் 22, 2025 18:08

சிந்திக்கணும் மக்களே ஒரு அரசியல்வாதிக்கு லஞ்சம் கொடுத்துதான் வந்து இருப்பார், அந்த அரசில்வாதியும் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து தான் பதவிக்கு வந்து இருப்பார். இதனால நாம தான் திருந்தானும் ஓட்டுக்கு பணம் வாங்காம யார் நல்லவன்னு யோசிச்சி ஒட்டு போடணும் அப்புறம் இப்படி வந்து கருத்து போடணும்.


RAVINDRAN.G
செப் 22, 2025 17:25

இந்த மூஞ்சிய பார்த்தால் பரீட்சை எழுதி பாஸ் செய்தமாதிரி தெரியலையே? லஞ்சம் கொடுத்து வேளைக்கு சேர்ந்தமாதிரி இருக்கு.


Keshavan.J
செப் 22, 2025 16:53

பேரு ராமசாமி மாதிரி தான் இருப்பான். reservation இல் வந்த வேலை. அரசியல் வியாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்திருப்பான்.


saravan
செப் 22, 2025 15:48

எவ்வளவு பெரிய தொகையை பிட்சை எடுக்குறாங்க இந்தக் காசில் இவன் குடும்பம் பிழைப்பிற்கு சாகலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை