உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் விஏஓ!

பட்டா மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் விஏஓ!

விழுப்புரம்: விழுப்புரம் சாலை அகரத்தில் பட்டா மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ சதீஷ் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அருகே உள்ள சாலை அகரம் கண்ணப்பன் நகரில் விக்கிரவாண்டியை சேர்ந்த அண்ணாமலை வசித்து வருகிறார். இவர் தனது மகள் வாங்கிய வீட்டு மனைக்கு பட்டா மாறுதல் செய்ய விஏஓ சதீஷ் என்பவரை அணுகினார்.அப்போது பட்டா மாறுதல் செய்ய சதீஷ் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அண்ணாமலை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஈஸ்வரியிடம் புகார் அளித்தார்.தொடர்ந்து லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரைப்படி, விஏஓ சதீஷ் என்பவரிடம் ரூ.20 ஆயிரத்தை அண்ணாமலை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஏஓ சதீஷ் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை