உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாரிசு சான்றிதழுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: புரோக்கருடன் சிக்கினார் விஏஓ

வாரிசு சான்றிதழுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: புரோக்கருடன் சிக்கினார் விஏஓ

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக, பேரம் பேசி 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் புரோக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவை சேர்ந்த புகார்தாரர் (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) வாரிசு சான்றிதழ் வேண்டி கடந்த வாரம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். இது தொடர்பாக இன்று தவசிக்குறிச்சி விஏஓ பிரேமானந்தனை சந்தித்து கேட்டபோது ரூ.4 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார். லஞ்சம் கொடுத்து சான்றிதழ் பெறுவதில் உடன்பாடு இல்லாத மனுதாரர், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.4 ஆயிரத்தை கொண்டு சென்றார். அதை, தான் வாங்காத விஏஓ, தனக்கு புரோக்கர் வேலை பார்க்கும் கமுதி எஸ்பி டிரேடர்ஸ் உரிமையாளர் வடிவேலு என்பவரிடம் கொடுக்கச் சொன்னார்.அதை அவர் வாங்கிக்கொண்டபோது, போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து விஏஓ பிரேமானந்தன், 46, புரோக்கர் வடிவேலு, 52, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R. THIAGARAJAN
ஆக 14, 2025 14:23

Its better Regional Institute of Corruptional Administrations and THE REPUTED NGOS MUST BE AUTHORISED FOR PERIODICAL COUNSILLING TO ALL THE GOVERNMENT STAFFS TOP TO BOTTOM ALSO ALL THE DISTRICT COURT ALSO JOIN TOGETHER TO MAKE THEM AWARENESS TO CAUTIONED THEM ABOUT THE EXISTING LAW AND ITS IMPACTS AND SEVEARITIES. APART FROM THE ABOVE IF SOMEONE INVOLVED FOR CORRUPTIONS THEIR EXNTIRE DEPENDANTS WILL BE LOOSING THEIR BENEFITS FROM PUBLIC FUNDS FOR 2 DECADES. IT WILL BE WORKED OUT.


Bhakt
ஆக 14, 2025 00:17

Our tems are very vulnerable for corruption.


முருகன்
ஆக 13, 2025 22:14

லஞ்சம் வாங்கினால் பதவி நீக்கம் சாகும் வரை சிறை தண்டனை என்று சட்டம் இயற்றினாள் ஒருவரும் லஞ்சம் வாங்க மாட்டார்கள்


தமிழ் நாட்டு அறிவாளி
ஆக 13, 2025 21:19

தண்டனை பெருசா இருக்காது. ஆனால் இந்த கெட்ட பெயரோடு இந்த கேஸையும் வாழ்நாள் பூராவும் சுமக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை