உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருண்குமார் - சீமான் மோதல் தொடர்கிறது; ஒருமையில் விமர்சித்து பதிவு

வருண்குமார் - சீமான் மோதல் தொடர்கிறது; ஒருமையில் விமர்சித்து பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை ஒருமையில் விமர்சித்து திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமார் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.திருச்சி சரக டி.ஐ.ஜி., ஆக பணியாற்றும் வருண்குமாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் சில ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாட்டில் பேசிய வருண்குமார், நாம் தமிழர் கட்சியினர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறினார். தன்னையும், தன் மனைவி, குழந்தைகளை பற்றி அவதுாறு செய்வதாகவும், படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், வருண்குமாருக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார். இதனையடுத்து சீமானிடம் ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு திருச்சி நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இதனை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வாறு இரு தரப்பினர் இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வந்த நிலையில் வருண்குமார் இன்று பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கொஞ்சநஞ்சம் பேச்சா.... திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்... இவ்வாறு அதில் வருண்குமார் கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த பதிவிற்கு நெட்டிசன்கள் வருண்குமாருக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் சீமானுக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Kasimani Baskaran
ஜன 25, 2025 00:21

சமூக வலைத்தளங்களில் ஒரு அரசு அதிகாரி இந்த அளவுக்கு நேரம் செலவிடுகிறார் என்றால் வேலை செய்கிறாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் வரத்தான் செய்யும். எனக்குத்தெரிந்த பலர் சமூக வலைத்தளங்களில் இருப்பார்களே அல்லாமல் பதிவிடுவது கிடையாது. குறிப்பாக மல்லுக்கட்ட மாட்டார்கள். வேறு கண்ணோட்டத்தில் பார்த்தால் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.


Murthy
ஜன 24, 2025 22:24

பெண்ணை ஏமாற்றி வரதட்சணை வழக்கில் சிறையில் இருந்த இவருக்கு பேச்சை பாரு . .....


Palanisamy Sekar
ஜன 24, 2025 21:35

திரு அண்ணாமலையை போல தானும் வரணும்கிற ஆசையில் இப்போதிருந்தே தன்னை அரசியலுக்கு தயார்ப்படுத்துகின்றார் என்றுதான் தோன்றுகின்றது. அடுத்த ஆண்டு தேர்தலுக்குள் போலீஸ் பதவியை விட்டுவிட்டு திமுகவில் சேர்ந்துவிடக்கூடும். காரணம் திமுகவும் சொல்லும் பார் எங்களிடமும் ஒரு ஐ பி எஸ் அதிகாரி இருக்கின்றார் என்று. அதற்க்கான முஸ்தீபுகள் தான் இவையாவும். திமுகவின் திட்டங்களில் இதுவே முன்னிற்கின்றது. புலியை பார்த்து சூடுபோட்டுக்கொள்ள துடிக்கும் பூனைக்கு மணிகட்டுவது திமுக என்பதில் சந்தேகமே இல்லை. ஒருபடத்தில் விக்ரம் சொல்வார் நான் போலீஸ் இல்லைடா பொறுக்கி என்பார். ஏனோ அந்த ஞாபகம் வந்துபோகிறது. தேவையற்ற வம்பில் தேடிவந்து விழுகின்றார் இவர்


Naga Subramanian
ஜன 24, 2025 21:05

ஆளும் கட்சியின் தயவில்லாமல் வருண்குமார் இப்படி பேசமுடியாது.


Jagan (Proud Sangi)
ஜன 24, 2025 20:04

உழைத்து படித்து வந்தவர். இது போல் பதவிக்கு உள்ள மரியாதையை விட்டு பேசுவது இவர் திராவிடம் போட்ட பிச்சையால் வந்தவர் எனவே ஈரோடு தேர்தலுக்கு உதவ வருகிறார் என்று எண்ண தோன்றுகிறது. சீருடைக்கு அவமானம்


தாமரை மலர்கிறது
ஜன 24, 2025 19:57

பாலும் தேனும் அமுதும் கலந்த தமிழின் நற்சொற்கள் அனைத்திலும் பிஹெச்டி பட்டம் பெற்றவர் சீமானும் அவரது தம்பிகளும். மூளை கொஞ்சம் ஜாஸ்தியாக உள்ளவர்கள். அவரிடம் வருண்குமார் வாலாட்டினால், சொக்கனே நினைத்தாலும், அவரை காப்பாற்றமுடியாது. வார்த்தைகளால் அர்ச்சித்துவிடுவார்கள் . ஜாக்கிரதை. பெரியாரையும் திராவிடத்தையும் ஒழிக்க வேண்டும் அறைகூவல் விடுபவர் சீமான். சங் பரிவாரில் இருக்க வேண்டியவர் போன்று பேசுவார். ஆனால் அவர் பேசும் வார்த்தைகளை கேட்டால் தான், எல்லோருக்கும் வயிற்றில் புளியை கரைக்கிறது. தம்பிகளுக்கும் நன்கு பயிற்சி கொடுத்துள்ளார். வாயை திறந்தால், கமகமவென்று மணக்கும் வார்த்தைகளை சரளமாக கொட்டும் திறன் கொண்டவர். மூளை ஜாஸ்தியாக உள்ள ஏராளமான திராவிட வம்சாவளிக்கு அந்த வார்த்தைகள் சகஜம் என்பதால், சீமானை ஒரு சிறந்த அண்ணனாக ரசிக்கிறார்கள்.


Jagan (Proud Sangi)
ஜன 24, 2025 19:56

இடஒதுக்கீட்டில் வந்த இவரெல்லாம் ஒரு போலீசு. இடஒதுக்கீடு எப்பிடி துறைகளை நாசம் செய்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. போலீசுக்கான கட்டுப்பாடு இல்லை. இவருடைய அதிகாரி என்ன செய்து கொண்டு உள்ளார் ? அண்ணாமலை புலியை பார்த்து சூடு போட்டு கொள்ளும் பூனை


பெரிய குத்தூசி
ஜன 24, 2025 19:34

தேசியம் என்றால் ஒன்றுதான், அது இந்திய தேசியம் மட்டுமே. தமிழ் தேசியம் என பினாத்தும் சீமான் கண்டிப்பாக பிரிவினைவாதத்தை விதைக்கும் தீவிரவாதி. வருண்குமார் சார், ராமநாதபுரம் பசும்பொன் தேசியமும் தெய்வீகமும் பரம்பரையில் வந்த அதிகாரி. கட்ஸ் இருக்கத்தான் செய்யும். சீமான் அடங்கிப்போவது நல்லது.


KRISHNAN R
ஜன 24, 2025 18:29

கருத்து சுதந்திரம், பிரீடம் ஆப் எஸ்பிரஸின் வரம்பை யாரும் நிர்ணயிக்க வில்லை. விளைவு ...இது போன்ற நிகழ்வுகளும்... பச்சைக்கிளி ஜோஸியர் மற்றும் பாட்டி கைது . யார் மணி கட்டுவது


Ramraj
ஜன 24, 2025 17:47

அரசியல்வாதியாக இருந்தாலும். அரசு அதிகாரியாக இருந்தாலும் தனிப்பட்ட கருத்துக்கு தடை இல்லை. ஒருவன் பேசும் சொல்லையும் ஒருவன் எடுக்கும் ஆடிதத்தையும் அவன் எதிரிதான் நிர்ணயிக்கிறான். NTK,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை