உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் அனுமதி மறுப்பால் வி.சி., ஆர்ப்பாட்டம் நிறுத்தம்

போலீஸ் அனுமதி மறுப்பால் வி.சி., ஆர்ப்பாட்டம் நிறுத்தம்

சென்னை : இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலை கண்டித்து, வி.சி., சார்பில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு, போலீசார் அனுமதி மறுத்துஉள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, வடகாடு கிராமத்தில் சமீபத்தில் இரு சமூகத்தினரிடையே ஜாதி மோதல் நடந்தது. இதைக் கண்டித்து, வி.சி., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதால், ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வி.சி., தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகாடு ஜாதி வெறியாட்டத்தை கண்டித்து, இன்று புதுக்கோட்டை மாநகரில் நடத்த உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த, கட்சியினர் விரும்பினர். ஆனால், நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெறுவது என தீர்மானித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைப்படி அனுமதி பெற்ற பின், திட்டமிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தியாகு
மே 14, 2025 23:11

அடங்க மறு அத்துமீறு என்ன ஆயிற்று


Mecca Shivan
மே 13, 2025 10:06

தம்பிக்கு அவ்வளவுதான் மரியாதையை ..மட்டு எல்லாம் .. ஓரமாய் போய் உட்காரு


RAJ
மே 13, 2025 07:08

தேச துரோகி.. .. சிதம்பரம் விழுப்புரம் மக்களே வெட்கி தலைகுனியுங்கள்..


sridhar
மே 13, 2025 05:59

சே , கடைசியில பிளாஸ்டிக் chair கூட கிடையாதா .


முக்கிய வீடியோ