உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது; விஜய் பற்றி வி.சி.க., ரவிக்குமார் விமர்சனம்

அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது; விஜய் பற்றி வி.சி.க., ரவிக்குமார் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விஜய் கட்சி ஆரம்பித்ததே எங்களுடன் கூட்டணி வைக்கத் தான் போல என்று விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமார் விமர்சித்து உள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே, த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் மேடையில் பேசிய நடிகர் விஜய், திருமாவளவனால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது. அம்பேத்கரின் புத்கக வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனது முழுக்க, முழுக்க நம்முடன் தான் இருக்கும் என்று கூறி இருந்தார். அவரின் பேச்சு, சமூக வலைதளத்தில் பேசு பொருளானது. திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளே காரணம் என்ற பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்வினையாற்றினர். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், விஜய் பேச்சில் தமக்கு உடன்பாடில்லை என்று விளக்கம் அளித்தார். இந் நிலையில் நடிகர் விஜய்யை விமர்சித்து விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவுக்கு அரசியல் ஒப்பனையின் ஆயுள் என்றும் தலைப்பிட்டு உள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது; திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும் கூட விஜய் அவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால், அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத் தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து 'அழைப்பு' விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்தை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள் தான் அவர் உடன்படாததால் விஜய் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள் . 'விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே' என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துரு அவர்களிடம் அலிபி(Alibi) என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

இராம தாசன்
டிச 09, 2024 03:04

திருமா கூட திரைப்படத்தில் நடித்து இருக்கார் - அவருக்கும் இந்த கருத்து பொருந்துமா


வைகுண்டஸ்வரன்
டிச 08, 2024 09:02

உங்க daleevaru என்னடான்னா சுய மரியாதை பற்றி பேசுறார்...நீ மாற்று கட்சி சின்னத்திலேயே வெற்றி பெற்று உன் சொந்த கட்சியின் மரியதைய அடகு வைத்து அரசியல்...இதுல மரியதை அது இதுன்னு வந்துட்டானுங்க


என்றும் இந்தியன்
டிச 07, 2024 19:31

அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது வி.சி.க., ரவிக்குமார். அதாவது சொல்வது என்னவென்றால் என்ன அவரு செய்தாலும் அதை கூட்டி மொழுகி அதிலே காலம் கடந்து விடும் என்பதைத்தான் ஆயுள் கிடையாது என்று சொல்கின்றார் என்று எடுத்துக்கொள்ளவும்.


பாலா
டிச 07, 2024 14:45

ஓசித் தெலுங்கனின் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றவன்.


ponssasi
டிச 07, 2024 14:44

சாத்தனூர் அணை நீர் திறந்து விழுப்புரம் மாவட்டம் மக்களை மிகுந்த சிரமத்துல்லாகியது, நடக்க முடியாமல் அமைச்சர் பொன்முடி அவர்கள் பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு வரும் என தெரிந்தும் சென்று மக்களை சந்தித்தார். நீங்க விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எங்க இருந்தீங்க, மக்கள் பாதிக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா? இதனை நாள் வாய்திறக்காமல் இருந்து இன்றைக்கு ஏன் ரோஷம் வருகிறது ரவிக்குமார். விழுப்புரத்தில் இருந்து திருமா வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும், ஆனால் யாரை நிறுத்தியிருந்தாலும் ரவிக்குமார் போல திருமாவளவனுக்கு ஜிங் ஜாங் போடமுடியாது.


N Annamalai
டிச 07, 2024 12:56

உங்கள் தொகுதியில் வெள்ளம். மழை பெய்தது உச்சம் .அங்கு சென்றீர்களா ?.இல்லை எம் எல் ஏ பார்த்துக் கொள்வர் என்று போகவில்லையா ?.ஓட்டு போட்ட மக்கள் அவர்கள் .நீங்கள் வாங்கும் சம்பளம் அவர்கள் மனது வைத்ததால் .அதில் கொஞ்சம் செலவு செய்ய கூடாதா ?.


sridhar
டிச 07, 2024 12:40

அரசியல் ஒப்பனையில் திருமா phd .


Dhurvesh
டிச 07, 2024 12:32

ஆதவ் அஜுண்ணா அவர்களே உங்கள் தந்தை நடத்தும் மார்ட்டின் லாட்டரி தான் ஏழை மக்களை சுரண்டி கொண்டு இருக்கு தெரியுமா , உங்கள் வீட்டிற்கு ED IT ரைட் எல்லாம் இதை முதலில் நீ சரி சேயா பாரு


கல்யாணராமன்
டிச 07, 2024 12:14

விசிகவும் விஜய் கட்சியும்தான் தமிழ்நாட்டில் உயிர் துடிப்புள்ள கட்சி - அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி எல்லாம் இரண்டாவது நிலைதான் என்று பிலிம் காட்டுகிறார்கள். விசிக ஒரு அரை வேக்காடு தமிழக வெற்றி கழகம் ஒரு அரை வேக்காடு என்பது மக்களுக்கு தெரியும்.


sundarsvpr
டிச 07, 2024 11:31

தனித்து நின்று வெற்றி பெறமுடியாத கட்சிகளை மக்கள் ஒதுக்கவேண்டும். அப்போதுதான் தி மு க ஆ தி மு க பி ஜெ பி போன்ற கட்சிகள் வலுப்பெற இயலும். ஜோசப் விஜய் கட்சி தனித்து போட்டியிட்டால் மட்டும் கட்சி நிலைத்து நிற்கும். இல்லையெனில் பொதுவுடைமை கட்சி காங்கிரஸ் போல் அடிவருடி நிலைக்கு தள்ளப்படும்.


Senthil
டிச 19, 2024 17:08

தமிழ்நாட்டில் பாஜக என்ற ஒரு கட்சி இருக்கா? 1996 ல் பாஜக ஒரு எம்எல்ஏ வென்றது, அதன்பிறகு 30 ஆண்டுகள் ஆகிறது ஆனால் அந்த ஒன்றுக்கே போராடுகிறது. இன்று உள்ள 4 MLA க்கள் அதிமுக ஓட்டால் கிடைத்தது என்பதை நினைவில் கொள்ளவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை