உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீரப்பன் மகளுக்கு சீமான் கட்சியில் பதவி

வீரப்பன் மகளுக்கு சீமான் கட்சியில் பதவி

சென்னை: சந்தன வீரப்பனின் மகள் வித்யாராணி; முதலில் பா.ம.க.,வில் இருந்தார். பின், 2020ல் பா.ஜ.,வில் இணைந்தார். அவருக்கு ஓ.பி.சி., அணி மாநில துணை தலைவர் பதவி தரப்பட்டது.கடந்த ஆண்டு பா.ஜ.,விலிருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். கடந்த லோக்சபா தேர்தலில், நா.த.க., சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.இந்நிலையில், நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியை சேர்ந்த வித்யா வீரப்பன், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்' என்று கூறியுள்ளார். விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் அபிநயா பொன்னிவளவனும் இதே பதவிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ