உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி: அரசியலில் பரபரப்பு

நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி: அரசியலில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: நெல்லையில், கள ஆய்வுக்கு சென்ற அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வேலுமணி, பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தலுக்கு முன்னர், பா.ஜ., உடனான கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்டது. இரு கட்சிகளும் தனித்தனியே களமிறங்கி உள்ளன. பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., கூறி வருகிறார். கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க., தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு பா.ஜ.,வினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இரு கட்சிகளும் 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அ.தி.மு.க., சார்பில் மாவட்ட வாரியாக கள ஆய்வு துவங்கப்பட்டு உள்ளது. மாஜி அமைச்சர்கள் 10 பேர் அடங்கிய இக்குழுவினர் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் கள ஆய்வு நடந்தது.திருநெல்வேலி ஜங்ஷனில் அ.தி.மு.க., மாநகர் மாவட்டம் சார்பில் கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாஜி அமைச்சர் எஸ்.பி., வேலுமணி கலந்து கொண்டு கள ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இந்நிலையில், மதியம் 3:00 மணியளவில் பெருமாள்புரம் பகுதியில் உள்ள பா.ஜ., துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் எஸ்பி வேலுமணி சந்தித்தார். உடன் மாவட்ட செயலாளர் கணேஷ்ராஜா சென்றிருந்தார். அ.தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்கும் இடையே ஒவ்வாமை உள்ள இச்சூழலில் இருவரும் சந்தித்து கலகலப்பாக பேசியுள்ளனர்.இது குறித்து அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறுகையில், எஸ்.பி., வேலுமணியின் இல்ல திருமண விழாவிற்கு அனைத்து கட்சியினரையும் சந்தித்து அழைப்பிதழ் தருகிறார். நயினார் நாகேந்திரனுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளார் என தெரிவித்தனர்.முன்னதாக காலை நடந்த அ.தி.மு.க., கள ஆய்வுக் கூட்டத்தில் பேசிய வேலுமணி, 2016 தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெறும் 601 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதுவும் தபால் ஓட்டுக்களில் தான் தோற்றார் என நயினார் மீது பாசத்தை பொழிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

K.n. Dhasarathan
நவ 23, 2024 15:02

நெருப்பு இல்லாமல் புகையா வேறு என்ன ? 4500 கோடிக்கு கணக்கு கேட்கவா போயிருப்பார் ? பாவம் எடப்பாடி பழனிசாமி, மிகவும் குழம்பி போயிருக்கிறார். தனி தனி அணிகள் கிளம்புகிறது, இதில் பொய் ஜே பி யின் பங்கு கணிசமானது.


pmsamy
நவ 23, 2024 09:01

இரண்டு மொள்ளமாரிகள் சந்திப்பு


karupanasamy
நவ 23, 2024 09:58

கொலை, கொள்ளைகார பேமானியை துரத்த


KR
நவ 23, 2024 06:46

Is SPV the Eknath Shinde of Tamilnadu.


அப்பாவி
நவ 23, 2024 03:48

இந்த ஆன்ஸ், பொன்ஸ் எல்லாம் வாயே தொறக்கலையே.


Kassalioppilan
நவ 22, 2024 23:42

பழைய நட்பு சந்தித்து உள்ளார்கள்


vijay,covai
நவ 22, 2024 22:33

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா


saravanan
நவ 22, 2024 21:11

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டும் பாஜக கூட்டணியில் அதிமுகவும், தேமுதிகவும் இணைந்திருந்தால் முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாகை சூடி இருப்பார்கள் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி வாய்பை பெற்றதற்கு அவர்களின் கொள்கையோ, ஆட்சியோ காரணமல்ல எதிர் தரப்பினர் பலம் வாய்ந்த ஒரு அணியை உருவாக்காமல் வெற்றியை வெற்றிலை பாக்கு வைத்து தாரை வார்த்து தந்து விட்டனர். இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து விழித்துக் கொண்டால் நாட்டிற்கு நல்லது


sankaranarayanan
நவ 22, 2024 20:56

என்னடா இது புதிராக இருக்கிறதே இப்போதுதான் கண்யாகுமாரியில் தளவாய் சுந்தரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கொண்டாடத்தில் கொடி அசைத்து சஸ்பெண்டு செய்யப்பட்டார் இப்போது நெல்லையில், கள ஆய்வுக்கு சென்ற அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வேலுமணி, பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசி இருக்கிறார் இவரும் விரைவிலேயே சஸ்பென்டு செய்யப்படுவாரா? பிறகு திருநெல்வேலியில் இரண்டு கட்சி பிளவும் கும்பகோணத்தில் கட்சிப்பிளவும் நடந்தேறியுள்ளன இவர்களும் சஸ்யபண்டு செய்யப்படுவார்களா? இப்படியே போனால் யார்தான் கட்சியில் மிஞ்சுவார்கள் ஜெய்குமாரும் ஷண்முகமுகமும்தான் இருப்பார்கள் போலிருக்குகிறது


Ramesh Sargam
நவ 22, 2024 20:14

அதற்குத்தான் எந்த அரசியல்வாதிகளையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது என்று சொல்வது. நம் முன் அடித்துக்கொள்வார்கள். நாம் இல்லாதபோது அணைத்துக்கொள்வார்கள்.


Perumal Pillai
நவ 22, 2024 20:13

Admk is in the grave with jayalalitha at the Marina cemetery. EPS has done the last rites to that party and it will not raise its head again.


முக்கிய வீடியோ