உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேங்கைவயல் வழக்கு; சிறப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி., மனு தாக்கல்

வேங்கைவயல் வழக்கு; சிறப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி., மனு தாக்கல்

புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவை ரத்து செய்து நீதித்துறை நடுவர் கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி., மனு தாக்கல் செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட வழக்கை, 2 ஆண்டுக்கு மேலாக விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி., புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த பாதகச்செயலை செய்துள்ளனர். முரளிராஜா பொய்த்தகவல் பரப்பியுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும், வெளியாட்கள் யாரும் இந்த செயலில் ஈடுபடவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பியது. குறிப்பாக, தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த அறிக்கையை கோர்ட் ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கை நீதித்துறை நடுவர் கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி., மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், 'குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவை நீக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், அதனை ஏற்கக் கூடாது என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழ்வேள்
ஜன 28, 2025 13:58

அவங்க ஆளை வைத்தே இந்தமாதிரி கேவலமான வேலையை செய்ய வைத்ததே திமுகவாக இருக்க வாய்ப்புகள் அதிகம் ....பிரித்தாளும் வேலையில் பிரிட்டீஷாரை விட கேவலமானவர்கள் இந்த கருப்பு பிரிட்டீஷ் அடிமை திமுக .....


தாமரை மலர்கிறது
ஜன 27, 2025 23:56

ஓ ரெண்டு வருடமாக இந்த கேஸை இழுத்து அடித்ததற்கு இது தான் காரணமா? பொதுமக்கள் குடிநீரில் மலத்தை கலந்தவர்கள் தீவிரவாதிக்கு நிகரானவர்கள். தீவிரவாதிகளை உச்சிமுகர்ந்து கொஞ்சுவது தான் ஸ்டாலினுக்கு கைவந்தக்கலை . திருமாவை குஷிப்படுத்த, இவர்களின் மீது கேஸ் போடாமல் தமிழக போலீஸ் அமைதி காத்துவந்துள்ளது கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது.


pv,முத்தூர்
ஜன 27, 2025 17:26

வேறு ஏதோ சமுகமாயிருந்திருந்தா, புலி, சிறுத்யெல்லாம் மீசையை முறுக்கிக்கிட்டு வந்திருக்கும். இப்ப வாலசுருட்டிக்கிட்டு வேடிக்கை பாக்கவேண்டியதுதான்.


ஆரூர் ரங்
ஜன 27, 2025 15:21

திருட்டு முகவின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும் ?தாழ்த்தப்பட்டவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. காசைக் காண்பித்து அவர்களது ஓட்டை வாங்கிவிடலாம். ஆனால் பி சி , எம் பி சி யிடம் இந்த வேலை நடக்காது. ஆகமொத்தம் 65 சதவீதம் ஜனத்தொகை உள்ள பிற்பட்ட வகுப்பு வாக்காளர்களை சந்தோஷப்படுத்தினால் போதும்.


அப்பாவி
ஜன 27, 2025 15:14

அவிங்க ஆளுங்களுக்கு அவிங்களே வெச்சிக்கிட்ட ஆப்பு. இது வன்கொடுமை ஆக்காது. சரிதான்.


sankar
ஜன 27, 2025 13:31

காவல்துறை செயல்பாட்டில் அரசின் தலையீடு வெளிச்சமாகி அசிங்கமாகிவிட்டது


சமீபத்திய செய்தி