உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ரவி அறிவிப்பு

துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ரவி அறிவிப்பு

சென்னை : ஊட்டியில் வரும் 25, 26ம் தேதிகளில், கவர்னர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்கிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா உட்பட, 10 மசோதாக்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஊட்டியில் கவர்னர் ரவி தலைமையில், 25, 26ம் தேதிகளில், பல்கலை துணை வேந்தர்கள் மாநாடு நடக்கிறது. இதில், சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்கிறார்.இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 'பல்கலை வேந்தராக கவர்னரே தொடர்கிறார். துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Chan
ஏப் 22, 2025 07:59

200ரூ ஊபீ ஏன் கதறுது?


மூர்க்கன்
ஏப் 22, 2025 16:57

2 ரூபாக்கு பதில் சொல்லத்தான் ~


பல்லவி
ஏப் 21, 2025 23:54

சிறகுகளை இழந்து நிற்கும் காக்கைகள் கேட்டிருக்கிறோம் ஆனால் வால் இல்லாமல் நரி எதுவும் செய்ய இயலாது.


venugopal s
ஏப் 21, 2025 17:45

மடம் கட்டப் போகிறார்களா?


Neethan K
ஏப் 21, 2025 14:06

போகிற போக்கைப் பார்த்தால்..அண்ணா பல் கலைக்கழகத்தில் மாணவியிடம் சீரழித்த அந்த அயோக்கியனே கூட அதே பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கப்படலாம். ஆளுங்கட்சிக்காரர்களுக்கு தானே முன்னுரிமை.


மூர்க்கன்
ஏப் 22, 2025 16:57

நீதான்


Neethan K
ஏப் 21, 2025 14:03

மக்களின் வரிப்பணத்தில் அரசு நிலத்தில் பேனா சிலை வைக்க எதற்கு 120 கோடி ரூபாய் என ஒருத்தரரும் கேட்கவில்லை..


Rathinasabapathi
ஏப் 21, 2025 22:51

3000 கோடில பட்டேல் சிலை அமைத்தது பீ சே பீ பீ பணத்திலா? அதுவும் மக்கள் பணம் தான். இதை சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல.


Ganesan
ஏப் 21, 2025 11:49

150 ஏக்கருக்கு மேல் கவர்னருக்கு தேவையா? கவர்னர் அலுவலகத்துக்கும், தங்குவதற்கும் இடம் கொடுத்துவிட்டு மீதி இடத்தில் தமிழ்நாட்டுக்கு சட்டமன்ற கட்டிடம் கட்ட வேண்டும். தமிழ்நாட்டுக்கு சொந்தமாக சட்டமன்ற கட்டிடம் இல்லை என்பது மிகப் பெரிய குறை.


Ganesan
ஏப் 21, 2025 11:48

ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தை மீறி உள்ளார் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆனால் அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டவருக்கு தண்டனை கிடையாதா இது குறித்து வழக்கறிஞர் குழு ஆராய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்


Velan Iyengaar
ஏப் 21, 2025 11:17

சுயலாபத்துக்காக கட்சியை குழிதோண்டி புதைப்பத்தில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை


Velan Iyengaar
ஏப் 21, 2025 11:16

தமிழகத்தில் திமுக வை மீண்டும் அரியணை ஏற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டி வேலை செய்கிறார் ....


Madras Madra
ஏப் 21, 2025 11:14

உச்ச நீதி மன்றமும் தமிழக அரசும் வாங்கி கட்டி கொள்ள போகிறார்கள் மொத்தமாக


சமீபத்திய செய்தி