உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; துவக்குகிறார் துணை ஜனாதிபதி

ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; துவக்குகிறார் துணை ஜனாதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஊட்டியில் ஏப்.,25, 26ம் தேதிகளில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் துவக்கி வைக்கிறார். கவர்னரும், பல்கலைகளின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார்'' என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.அந்த தீர்ப்பில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா உட்பட, 10 மசோதாக்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஊட்டியில் கவர்னர் ரவி தலைமையில், 25, 26ம் தேதிகளில், பல்கலை துணை வேந்தர்கள் மாநாடு நடக்கிறது. இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊட்டியில் கவர்னர் ரவி தலைமையில், 25, 26ம் தேதிகளில் துணை வேந்தர் மாநாடு நடைபெறும். துணை வேந்தர்கள் மாநாட்டில் பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்கள் பேச உள்ளனர்.ஏப்ரல் 25ம் தேதி மாநாட்டை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் துவக்கி வைப்பார். மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் சிறப்பு உரையாற்ற உள்ளார். மாநாட்டில் மத்திய, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், தனியார் பல்கலை துணைவேந்தர்கள் பங்கேற்கின்றனர். திறன் மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. உயர் கல்வியில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

J.Isaac
ஏப் 23, 2025 17:30

இது ஒரு வித்தியாசமான பிடிவாதம்.


பாமரன்
ஏப் 22, 2025 19:29

மாநில லப்பர் இஷ்டாம்பு வேந்தர்ங்கிற முறையில் அரேஞ்ச் பண்ணலை... அதேபோல் தமிழக பல்கலைக்கழகத்தில் இருந்து துணை வேந்தர்கள் அழைக்கப்படுவார்கள்ன்னும் தெளிவாக நியூஸ் போட பயம்...அதை விளக்கி சொன்னால் வெளியிடவாவது தைரியம் வேண்டும்... ஒவ்வொரு தடவையும் மாநில தேர்தல் முடிவுகள் வரும் போது கலைஞர் நியூஸ் அல்லது ஜெ நியூஸ் குடுக்கும் ரிப்போர்டிங் மாதிரி இருக்கு டெய்லி பூவோட ரிப்போர்டிங் மற்றும் கருத்து எடிட்டிங்... ஸோ சேட்... இந்த மாதிரி செய்திகள் ஒன்லி ஃபிட் ஃபார் பகோடாஸ்ன்னு தெரியாமல் கருத்து பதிஞ்சிட்டோமா...???


தஞ்சை மன்னர்
ஏப் 22, 2025 18:18

இதில் காமெடி என்னனா இவரை எதுக்கு கோர்த்து விட்டு பார்க்குது என்று தெரியவில்லை ஆளுநர் மாளிகையில் இருக்கும் இந்த பிகார் மனிதர் சின்ன பிள்ளைகள் சண்டை போட்டு விட்டு இருடா போய் அண்ணன் அக்கா அம்மா அப்பா யாராவது கூட்டியாந்து வைச்சிகிறேன் என்று சொல்லுவது போல இருக்கு வேந்தர்கள் விஷயத்தில் இவர்கள் அடித்த கூத்துக்கு உச்சநீமன்றம் தீர்ப்பு கொடுத்து வெளியேற்றி விட்டது அப்படி என்றால் என்ன அர்த்தம் மான மரியாதையோடு விலகி இருக்கவேண்டும் திரும்ப திரும்ப மூக்கை நுழைத்தான் என்ன அர்த்தம் அசிங்கமாக இல்லையா இப்போதுதான் இவரு உச்ச நீமன்றமா பாராளுமன்றம் என்று கேட்டு சர்ச்சை ஆரம்பித்து வைத்து இருக்கார் அதை தொடர்ந்து பி சே பி வணரக்கூட்டம் ஆரம்பித்து வைத்து விட்டது சர்ச்சை வழக்கு தொடுக்க அனுமதி என்று போய் கொண்டு இருக்கும் பட்சத்தில் இவர் இங்கு எதுக்கு வருகிறார் இங்கு


என்னத்த சொல்ல
ஏப் 22, 2025 16:08

கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லைனு தெளிவு படுத்திய பிறகு, அத பன்றேன், இத பண்றேன் சொல்லிட்டு. எதோ தமிழ்நாட்டு மேல, பிகாரிலிருந்து வந்த இவருக்கு தான் அக்கறை இருக்கிற மாறி...


Dharmavaan
ஏப் 22, 2025 20:00

ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று சொல்ல அவனுக்கு அதிகாரமில்லை என்பதுதான் துணை ஜனாதிபதி நிலை


senthil, Ethiopia
ஏப் 23, 2025 09:48

முதலில் மருத்துவ படிப்பை தமிழில் கொண்டு வரவும். அரசியல்வாதிகளின் பள்ளியை நிறுத்தி தமிழ் வழியில் கல்வி கற்க ஏற்பாடு செய்யவும் பிறகு வாய் சாவ்ட்ட்டால் விடலாம்


sambaivelan
ஏப் 22, 2025 15:54

ஒருத்தன் தான் இப்படி என்று நினைத்தால், எல்லோருமேவா? சகிக்கலையே. அடுத்து னைத்து அமைச்சர்களையும் கூட்டி ஒரு கூட்டம் போடலாம். ஆட்சியாளர்களைக்க கூட்டி விசாரிக்கலாம். முதல்வரும் மக்களும் வாயில் விரலை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும். இதுக்கு ஒரு என்டு கிடையாதா?


sundarsvpr
ஏப் 22, 2025 15:39

திறமையான நேர்மையான கல்விக்கூட துணைவேந்தரை அரசு நியமிப்பது சரியாய் இருக்காது. அரசு நேர்மையா என்பதே கேள்விக்குறி. நல்ல வேந்தர் வேண்டும் என்பது படிக்கும் மாணவர்களின் ஆசை, எனவே இதனை மாணவர்கள் பொறுப்பில் விடுவதுதான் சரியாய் இருக்கும்.


ஆரூர் ரங்
ஏப் 22, 2025 15:35

சட்டையைக் கிழித்துக் கொண்டு கவர்னரை lப் பார்க்கச் சென்றபோது அவர் வெறும் போஸ்ட்மேனாக தெரியவில்லை.


லிங்கேஸ்வரன்
ஏப் 22, 2025 15:31

சென்னையில் வெயில் கொளுத்துதாம். ஒரு வாரம் அரசு செலவில் ஊட்டியில் ஓய்வு எடுக்க வேண்டியதுதான்


Tirunelveliகாரன்
ஏப் 22, 2025 14:55

பொறியில் மாட்டபோது எலி. தேவையற்ற வேலை. இந்திய சட்டத்தை மதியுங்கள். இது 21 ஆம் நூற்றாண்டு இன்னும் பழைய உங்கள் புத்தியில் இருக்காதீர்கள்


Chandra
ஏப் 22, 2025 14:47

தேவையில்லாத போட்டி மாநாடு ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை