உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.திருப்பூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: துணை ஜனாதிபதி ஆன பிறகு முதன்முறையாக கோவை, திருப்பூர் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உழைப்பு ஒருபோதும் வீணாகாது; திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cy8oe4c0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவின் ஏற்றுமதி எதிர்காலத்தில் இரண்டு மடங்காக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்க வரி விதிப்பு பிரச்னைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும். தொழில் துறையினர் நம்பிக்கை இழக்க வேண்டாம். அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அவிநாசி அப்பன் அருளால் நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். பிரதமர் மோடி என்ன பேசுகிறார் என உலகம் உற்று நோக்குகிறது. சிறப்பான காலங்களும், கடின காலங்களும் வரும். தொடர்ந்து கடினமாக உழைத்தால் வெல்லலாம். சமூகத்தை உயர்த்த வேண்டும் என்பதே எப்போதும் நமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M.Sam
அக் 29, 2025 20:17

ஒண்ணும் கிடைக்காது...


rajasekaran
அக் 29, 2025 18:14

காசா பணமா சும்மா வந்ததுக்கு அடிச்சு உட்டுட்டு போக வேண்டியது தான்.


Biden
அக் 29, 2025 16:14

RSS


முதல் தமிழன்
அக் 29, 2025 15:14

அமெரிக்கா நினைச்சாதான் குறைக்க முடியும். இங்கே இருந்து பேசிகிட்டு இருந்தால் அவங்களுக்கு தெரியாது.


கந்தசாமி
அக் 29, 2025 14:41

இவர் மட்டும்தான் இன்னும் கருத்து சொல்லலைன்னு நினைச்சேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை