மேலும் செய்திகள்
ஆயுத பூஜை கொண்டாட தயாராகும் நிறுவனங்கள்
10-Oct-2024
வெற்றித் திருநாள்விஜயதசமி என்றால் வெற்றியை தரும் நாள். இந்நாளில்தான் சும்பன், நிசும்பன், ரத்தபீஜன், மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை பராசக்தி அழித்தாள். நம் மனதின் உள்ளேயும், வெளியேயும் நன்மை, தீமைக்கும் இடையே போராட்டம் நடந்து கொண்டே இருக்கும். கல்வி, வீரம், செல்வத்தை வைத்து நம் வாழ்க்கையையும், நல்ல எண்ணத்தை வைத்து மனதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்பதே விஜயதசமியின் நோக்கம். இந்த நாளில் புதிய முயற்சிகளைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம். உதாரணமாக தொழில் தொடங்குவது, பள்ளியில் சேர்ப்பது, இசை, பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்கத் தொடங்குவது நல்லது. படிப்பில் நம்பர் 1படிப்புக்கு தெய்வம் சரஸ்வதி. இவளுக்கும் குருநாதர் இருக்கிறார். அவரே மகாவிஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவர். இவரை வழிபட்டால் படிப்பில் நம்பர் 1 ஆக திகழலாம். வேதங்களின் துணையுடன் பிரம்மா படைப்புத் தொழிலை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்த வேதங்களை குதிரை வடிவில் உருமாற்றி மது, கைடபர் என்னும் அசுரர்கள் பறித்துச் சென்றனர். இதனால் உலகம் இருண்டது. பிரம்மா உடனே மகாவிஷ்ணுவிடம் சொல்ல அவர் குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவராக அவதரித்து, அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டார். ஹயக்ரீவப்பெருமாளின் அடியவரான வாதிராஜர் இயற்றிய ஹயக்ரீவ ஸ்லோகத்தை தினமும் ஜபித்தால் படிப்பில் எப்போதும் நம்பர் 1 ஆகத் திகழ்வீர்கள். ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதம்ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே.தொழில் வளர்ச்சிக்கு...சரஸ்வதிபூஜை அன்று குழந்தைகள் புத்தகம், பேனா, பென்சிலுக்கும், பெண்கள் அடுப்பு, அரிசிப்பானைக்கும், தொழில் புரிவோர் கருவிகளுக்கும், வாகனங்களுக்கும் பூஜை செய்வர். இப்படி தொழிலுக்கு பயன்படும் கருவிகளுக்கு நன்றி செலுத்தும் நாளே சரஸ்வதிபூஜை. ஏனெனில் ஒவ்வொரு தொழிலும் ஒரு கலைதானே. இதனால்தான் கலைமகளாகிய சரஸ்வதியை வணங்குகிறோம். விஜயதசமி அன்று பள்ளி, கல்லுாரிக்கு சென்று படிப்பதும், தொழில் செய்ய தொடங்குவதும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குஷியோ குஷிஅக்காலத்தில் குருகுல மாணவர்கள் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வருகிறது என்றால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே குஷியாகி விடுவர். காரணம் குருகுலத்தில் பாடம் நடத்துவதை குறைத்துக் கொண்டு, அந்த மாதம் முழுவதும் செயல்முறை கல்வியில் ஈடுபடுத்துவர். வாட்ட சாட்டமான மாணவர்களை பனைமரத்தில் ஏறச்செய்து ஓலைகளை நறுக்கச் சொல்லுதல், அதை வெயிலில் உலர்த்தி காய வைத்தல், பின் அதை பதப்படுத்தி பாடம் எழுதுவதற்கு ஏற்றாற்போல மாற்றச் செய்வர். அதைப்போல் கரையான் அரித்த சுவடிகளில் உள்ள பாடத்தை புதிய ஓலையில் எழுதச் செய்வர். மேலும் குருகுலத்தை துாய்மைபடுத்தும் விதமாக வெள்ளை அடித்தல், கோலமிடுதல் போன்ற பணிகளிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவர். 11 முறை படிங்க...ஸ்ரீவித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லிசாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லிவாணி கமலவாணி வாக்தேவி வரநாயகிவீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தேஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதேஇந்த மந்திரத்தை விஜயதசமியன்று மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் 11முறை சொல்லி பார்வதியை வழிபட்டால் மனபயம் நீங்கும். ஞாபகசக்தி, திறமை, அறிவாற்றல் அதிகரிக்கும்.
10-Oct-2024