உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்; அறிவித்தார் திருமா

விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்; அறிவித்தார் திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்சியில் இருந்து, விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.ஆதவ் அர்ஜுனாவின், 'வாய்ஸ் ஆப் காமன்' அமைப்பு சார்பில், 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பிலான நுால் வெளியீட்டு விழா, சென்னையில் கடந்த 6ம் தேதி நடந்தது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 'தமிழகத்தில் உள்ள மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்' என்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6fponxyu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க.,வை நேரடியாக தாக்கி பேசியது, அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. அதேநேரத்தில், விழாவில் தி.மு.க.,வுக்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. உயர் நிலைக்குழு கூடி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், இன்று (டிச.,09) கட்சியில் இருந்து, விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து கடந்த டிச.,7ம் தேதி, கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு 'தவறான முன்மாதிரியாக' அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி,கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

Ramesh Sargam
டிச 10, 2024 20:16

அந்த இரட்டை இலை கட்சியை எப்படி EPS & OPS அழித்தார்களோ, அதுபோல விடுதலை சிறுத்தை கட்சி இந்த இருவரால் அழியும். மீண்டும் திமுகவுக்கு குஷிதான் போங்க...


AMLA ASOKAN
டிச 09, 2024 20:15

ஆதவ் அர்ஜுனா ஊழல் லாட்டரி மார்ட்டினின் கருப்பு பண மருமகன் . மற்றபடி அவர் பெரிய அறிவாளி , அரசியல் தலைவர் என்று எந்த அந்தஸ்தும் இல்லாத ஒரு தனி நபர் . இவருக்கு ஏன் இத்தனை வெளிச்சம் ?


nagendhiran
டிச 09, 2024 18:15

சும்மா மிரட்டிட்டு விட்டுவிடுவீங்களா தலைவரே? வா


ghee
டிச 09, 2024 17:47

இதோ வந்துட்டார்...ஒரிஜினல் திராவிட கரகாட்ட கோஷ்டியின் தலைவர் வைகுண்டம்.....எல்லாரும் ஜோரா கை தட்டுங்க


வைகுண்டேஸ்வரன்
டிச 09, 2024 16:00

திருமா விலை போய்விட்டார். இனி ஆதவ் அர்ஜுனா சொல்படி தான் நடந்தாக வேண்டும். ஒரு சிறுத்தை, சில லட்சங்களுக்கு பூனை ஆகிவிட்டது.


வைகுண்டேஸ்வரன்
டிச 09, 2024 15:51

பணம் வாங்கி விட்டதால் திருமா வால் ஒன்றும் செய்ய முடியாது. விசிக வை திருமா அடகு வெச்சுட்டான். 6 மாதம் கழித்து மொத்தமா வித்துடுவான்.


வைகுண்டேஸ்வரன்
டிச 09, 2024 15:48

. சஸ்பென்ட் டாம். இதென்ன கவர்மெண்ட் ஆபீஸா? திருமா வை வாங்கிட்டானுங்க. திருமா இப்போ பாஜக அடிமை சங்கி.


MP.K
டிச 09, 2024 15:48

ஒழுங்கு நடவடிக்கை


sankar
டிச 09, 2024 14:57

ஓனர் அவுருதான்னு சொல்றாங்க


prabhu
டிச 09, 2024 14:42

திரு திருமா அவர்களே நீங்கள் ஆதவ் அவர்களை நிரந்தரமாக நீக்குங்கள் அது தான் உங்கள் கட்சிக்கு நல்லது, இல்லை என்றால் DMK கோபித்து கொள்ள போகிறார்கள் , உங்கள் இந்த முடிவு 2026ல் தமிழகம் நல்ல ஆட்சி கிடைக்கும் , ஆதவ் என்ன கோவேர்ந்மேன்ட ஸ்டாப் ஆ 6 MONTH சஸ்பென்ட் செய்யா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை