உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அழுக்குத்துணியில் லஞ்சப்பணம்: அள்ளி வீசிய டிரைவர்; பட்டுக்கோட்டை நகராட்சி படாதபாடு

அழுக்குத்துணியில் லஞ்சப்பணம்: அள்ளி வீசிய டிரைவர்; பட்டுக்கோட்டை நகராட்சி படாதபாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர், - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டட அனுமதி வழங்க லட்சக்கணக்கில் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று (ஆக.02) இரவு 8:00 மணியில் இருந்து இன்று(03ம் தேதி) அதிகாலை 6:00 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பணம் பறிமுதல்

அப்போது, நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள இடத்திற்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்ச பணத்தை பெற்று மறைத்து வைத்து இருந்த பொறியாளர் மனோகரனிடம் இருந்து 84 ஆயிரம் ரூபாய், கான்ட்ராக்டர் எடிசன் என்பவரிடம் இருந்து 66 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், போலீசாரை கண்ட நகராட்சி கமிஷனர் குமரனின் டிரைவர் வெங்கடேஷன் நகராட்சி அலுவலகத்தின் காம்பவுண்டு சுவரில் இருந்து 8,000 ஆயிரம் ரூபாயை துாக்கி வீசியதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கமிஷனர் குமரன் தனது வீட்டிற்கு 5 லட்சம் ரூபாயை, எடுத்துச் செல்ல டிரைவரின் அழுக்கு துணிகளுடன் மறைக்க கூறி இருந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கமிஷனர் குமரன், உதவி பொறியாளர் மனோகரன், டிரைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைவரின் வீடுகளில் சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

sundaran manogaran
ஆக 03, 2024 20:29

இப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அலுவலர்களின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டும்.அந்த துறையே லஞ்ச ஊழல் துறை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.


Sivaprakasam Chinnayan
ஆக 04, 2024 06:31

Oru nall koothu


aaruthirumalai
ஆக 03, 2024 13:46

பயங்கரமாக தண்டனை குடுக்க போகிறார்கள் ஹி ஹி ஹி


David DS
ஆக 03, 2024 12:35

லஞ்ச ஒழிப்பு துறைக்கு சவால். கோவில்பட்டி தாலுகா தூத்துக்குடி மாவட்டம் இ.சத்திரப்பட்டி சோதனை போட்டு பிடிக்க முடியுமா.


Ramesh Sargam
ஆக 03, 2024 13:29

அவ்வளவு ஏன், சென்னையில் லஞ்சம் வாங்கும் ஒரு அதிகாரியையாவது இவர்களால் பிடிக்க முடியுமா?


Jysenn
ஆக 03, 2024 11:39

Promotion follows.


kulandai kannan
ஆக 03, 2024 11:07

பிணந்தின்னி கழுகுகள்.


rasaa
ஆக 03, 2024 10:29

கைது நடவடிக்கையில் ஈடுபட்ட ... துறையினர் ஆயுத படை பிரிவிக்கு மாற்றப்பட்டார்கள்


தமிழ்வேள்
ஆக 03, 2024 10:24

வாங்கிய லட்சத்தில் கணிசமான பகுதியை உடன்பிறப்பு கும்பலுக்கு கொடுத்து விட்டால் பிறகு நோ கேஸ் நோ நடவடிக்கை..ஒன்லி ப்ரமோஷன்... ஆனால் லஞ்சம் புகார் அளித்தவனை பொய் கேஸ் போட்டு ஒருவழி ஆக்கிவிடும் திருட்டு திராவிடம்... அண்ணாதுரை காட்டிய கண்ணியம் கடமை இதுதான்... திராவிடம் அழிந்தால் தான் தமிழகம் உருப்படும்.


ஆரூர் ரங்
ஆக 03, 2024 10:15

பொன்முடிக்கே கருணை காட்டியவர்கள் இவர்களுக்கும்...


பாரதி
ஆக 03, 2024 10:07

படித்தவர்களின் அற்புத சாதனை... கொள்ளையன் வெள்ளையன் செய்த கல்வித்திட்டம்... சுதந்திரம் பெற்றும் தொடர்ந்த நேரு அசிங்கம் நாட்டின் அவமானப் பேய்...


Nagarajan D
ஆக 03, 2024 09:53

அப்புறம் என்ன விசாரணை பிறகு நீதியற்ற நீதிமன்ற விசாரணை வாய்தா வாய்தா தீர்ப்பு ஒத்திவைப்பு தீர்ப்புக்கு இடைக்கால தடை இதெல்லாம் முடிவதற்குள் இந்த குமாரின் கொள்ளுப்பேரன் செத்துப்போயிருப்பான்...ஏண்டா அவன் லஞ்சம் வாங்கியது தெரியுது அப்புறம் என்ன விசாரணை... அவனை நடு ரோட்டில் வைத்து சுட்டு கொல்லுங்கடா...இவனுங்க தற்காலிக பணியிடைநீக்கம் பின்னர் வேறு இடத்திற்கு மாற்றல்... எந்த அரசு ஊழியனும் வேலை செய்வதில்லை லஞ்சம் வாங்குவது இவனுங்க பிறப்புரிமை.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ