உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை மாநில கல்லுாரியில் படித்தவர் விஞ்ஞான் ரத்னா விருது பெறும் பத்மநாபன்

சென்னை மாநில கல்லுாரியில் படித்தவர் விஞ்ஞான் ரத்னா விருது பெறும் பத்மநாபன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அறிவியல் - தொழில் நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்ததற்கான விஞ்ஞான் ரத்னா விருதை வென்றுள்ள கோவிந்த ராஜன் பத்மநாபன், 86, தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கான, முதலாவது தேசிய அறிவியல் விருதுகளை, மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.'விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா, விஞ்ஞான் குழு' என, நான்கு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பூர்வீகம் தஞ்சாவூர்

இந்த பட்டியலில், அறிவியல் - தொழிநுட்பத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான விஞ்ஞான் ரத்னா விருது, தமிழகத்தைச் சேர்ந்த உயிரி வேதியியல் விஞ்ஞானி கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர இளம் விஞ்ஞானிகள் 18 பேருக்கு விஞ்ஞான் யுவா விருதும், 13 பேருக்கு விஞ்ஞான் ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன. சந்திரயான் - 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய குழு, விஞ்ஞான் குழு விருதுக்கு தேர்வாகி உள்ளது.விஞ்ஞான் ரத்னா பெறும் கோவிந்தராஜன் பத்மநாபன், தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர். இளம் வயதிலேயே பெற்றோருடன் கர்நாடகாவின் பெங்களூரில் குடியேறி னார். பெங்களூரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.இவரது குடும்பத்தினர் அனைவருமே இன்ஜினியர்கள் என்பதால், பத்மநாபனும் பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.

பத்மபூஷண்

ஆனால், அதில் அவருக்கு ஆர்வம் ஏற்படவில்லை. பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியவர், சென்னை மாநிலக் கல்லுாரியில் சேர்ந்து இளநிலை வேதியியல் பட்டப்படிப்பு முடித்தார்.அதன்பின், டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில், மண்வள வேதியியலில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தார்.பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் உயிரி வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்தார். அதே கல்வி நிறுவனத்தில் இயக்குனராகவும் பணியாற்றினார்.மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற வேதிப்பொருளின் மருத்துவப் பண்புகள் குறித்து இவரது குழு, வெற்றிகரமான ஆய்வு மேற்கொண்டது.இவரது பணிகளுக்காக பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழகத்தின் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலையின் வேந்தராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஆக 09, 2024 11:50

படிப்பாளியாக இல்லாம ரூட் தலையா இருந்திருந்தா இந்நேரம் மந்திரியா ஆகியிருக்கலாம்


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 09, 2024 10:55

மாநிலக் கல்லூரி என்று மொட்டையாகப்போடாமல் "அந்தக் காலத்து மாநிலக் கல்லூரி" என்று போட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. நந்தனம் கலைக்கல்லூரி பச்சையப்பன் கல்லூரி மாநிலக்கல்லூரி ஆகிய இம்மூன்று கல்லூரிகளும் குறிப்பிட்ட செயலுக்கு புகழ் பெற்றவையாகும்


HoneyBee
ஆக 09, 2024 08:28

திராவிட மாடலால் தான் இவர் இந்த தகுதி பெற்றார் என்று ஸ்டிக்கர் ஒட்ட ரெடியா வருவாங்க ஊபிஸ்


Kalyanaraman
ஆக 09, 2024 08:18

வாழ்த்துக்கள் - விருது பெறுபவர்களுக்கு. பாராட்டுக்கள் - புதிய விருது ஏற்படுத்தி அறிவித்த பாஜக அரசுக்கு. குர்குமின் புற்றுநோயை குணமாக்கும் முக்கிய மருந்து. இதுபோன்ற விருதுகள் கொடுக்கும்போது தான் ஆராய்ச்சியாளர்களைப் பற்றி தெரிகிறது. வருங்காலத்தில் பலர் ஆராய்ச்சி செய்வதற்கு ஊக்கம் அளிக்கும். நமது சித்தர்களின் பாடல்களை ஆராய்ச்சி செய்தாலே பலவிதமான கொடிய நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்க முடியும். நமது பல மருத்துவ கண்டுபிடிப்புகளை ஜெர்மன்காரன் இங்கிருந்து விலைக்கு வாங்கி விட்டான். மேலும் விற்காமல் இருக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். பண்டைய காலத்தைப் போல் மருத்துவத்தில் தலைசிறந்து, உலகுக்கு வழிகாட்டியாக இருப்போம் என்பதில் ஐயமில்லை.


பிரேம்ஜி
ஆக 09, 2024 08:03

சிறப்பான தகவல். அய்யா வாழ்க பல்லாண்டு!


Subramanian
ஆக 09, 2024 07:26

வாழ்த்துகள்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி