உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயலால் பாதித்த மக்களை அலுவலகம் வரவழைத்து உதவி செய்த விஜய்

புயலால் பாதித்த மக்களை அலுவலகம் வரவழைத்து உதவி செய்த விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரம் பகுதி மக்கள் 250 பேரை கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து த.வெ.க., தலைவர் விஜய் நிவாரண பொருட்களை வழங்கினார்.தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கிய நடிகர் விஜய், 2026ல் கூட்டணி ஆட்சி அமைப்போம் எனக்கூறி தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பினார். அதன் பிறகு அவர் பல அறிக்கை வெளியிட்டு உள்ளார். ஆனால், பெஞ்சல் புயல் காரணமாக, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்து உள்ளன. அங்கு நிவாரண பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது. எதிர்க்கட்சிகளும் தங்கள் பங்குக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால், த.வெ.க., கட்சியிடம் இருந்தோ, விஜய் தரப்பில் இருந்தோ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது விமர்சனத்தை கிளப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று, திருவண்ணாமலையில் நிலச்சரிவினால் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=34oyh4od&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், டி.பி.சத்திரம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நடிகர் விஜய் இன்று நிவாரண உதவிகளை வழங்கினார். பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புயலால் பாதித்த பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 250 பேருக்கு உதவிப் பொருட்களை வழங்கினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அக்கட்சி வழங்கி வெளியிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Suresh sridharan
டிச 04, 2024 07:14

மக்களுக்கு மக்கள் பாதிக்கப்படும் பொழுது அவரவர்கள் இடத்திற்கு சென்று நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றொரு தலைவனுக்கு தெரியாதா


Ramesh Sargam
டிச 03, 2024 22:31

ஒருவேளை விஜய்க்கு, தண்ணீரில் கண்டமோ. மறைந்த நடிகர் விவேக் அவர் நடித்த ஒரு படத்தில் அவருக்கு தண்ணீரில் கண்டம் என்று கூறி, தண்ணீரை தவிர்ப்பார். அதுபோல விஜய் பாதித்த இடங்களுக்கு செல்லாமல், பாதித்த மக்களை அலுவலகம் வரவழைத்து உதவி செய்கிறார். இவரெல்லாம் நாளை ஆட்சியில் அமர்ந்தால் .... இன்னும் என்னவெல்லாம் கூத்து நடக்குமோ...?


Dhanraj
டிச 03, 2024 21:28

அடிக்கிற அடியை ஓங்கி அடித்துவிடுங்கள்.... விழுகிற அடி மதவாத சக்திகளுக்கும் சேர்ந்து விழ வேண்டும். தூற்றுவார் தூற்றட்டும்.


M Ramachandran
டிச 03, 2024 20:17

ஆரம்பிச்சுட்டான்ங்களெ ஆரபிச்சு. இனி அவன் அவன் போட்டோ சூட் தான்


Barakat Ali
டிச 03, 2024 19:36

கட்சியாவதற்கு முன்பு இயக்கமாகச் செயல்படுத்தினாரே ...... அப்போது இது போன்ற உதவிகள் கொடுக்கப்பட்டனவா ????


Rafiq Ahamed
டிச 03, 2024 19:35

2015–ல் புரட்சி தலைவி , கலைஞர் அய்யா இருக்கும் போதே நான் என் வேலைகளை ஆரம்பித்து விட்டேன் நீ புரட்சி தலைவி அம்மாவை பார்த்து பயந்து ஓடியவர் தான் நடிகர் vijay


Perumal Pillai
டிச 03, 2024 19:27

மக்களை பிச்சைக்காரர்கள் என நடத்தும் கோமாளி.


Rafiq Ahamed
டிச 03, 2024 19:26

சென்னையில் வெள்ளம் எங்கே இருக்கிறது நல்ல டிராமா. விஜய் 2026 தமிழாடு சட்ட சபை தேர்தலில் ஜெயிப்பதற்கு ஒரு சவால்


Kasimani Baskaran
டிச 03, 2024 19:17

குறிப்பிட்ட மொழி பேசுபவர்களை மட்டுமே தனியாக கவனித்து இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.


Balasubramanian
டிச 03, 2024 19:00

கொடுப்பவர்கள் சென்று கொடுக்க வேண்டும்! யாசகம் பெற விரும்புவோர் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை