உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது, யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி: விஜய்

இது, யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி: விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொது மக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக தி.மு.க., அரசு உள்ளது,'' என த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய் கூறியுள்ளார்.சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பாலாஜி என்ற டாக்டரை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். அவரை கைது செய்த போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4dlpfsy4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் டாக்டர் பாலாஜி இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு டாக்டரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த டாக்டர் பாலாஜி, விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.தமிழகத்தில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Rpalnivelu
நவ 14, 2024 22:43

விஜய்யின் பண விவகாரம் மிகப் பெரிய அளவில் தொந்தரவு கொடுக்கப் போகிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இவரின் கணக்குகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறதாம்


Mani . V
நவ 14, 2024 05:42

தெரிஞ்சு போச்சா? உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?


J.V. Iyer
நவ 14, 2024 04:51

தப்பு விஜய்ண்ணா.. மத மாற்றத்திற்கு எவ்வளவு ஆதரவு கொடுக்கிறார்கள் தெரியுமா?


hari
நவ 13, 2024 23:21

ஒரே குண்டு சவுண்ட் இருக்கே.... ஓஹோ வைகுண்டம் கதறலா


M Ramachandran
நவ 13, 2024 20:22

அமாம் ஜோசப்பு விஜய் அவர்களே நீஙகள் கத்தொதோலீக்க கிறிஸ்துவர் என்று பாதிரியார் ஒருவர் யு டியூபில் பொளந்து கட்டியிருக்கிறாரெ அது உங்கள் கவனத்திற்கு வந்துள்ளதா? இந்துக்களை திட்டி ஏமாளிகள் வேறு மதத்தினர் என்றும் அவர்கள் மதத்தினருக்கு விஸ்வாசிகளாக இருக்கிறார்கள். இன்னும் திருந்த வில்லையா என்று கேட்டகிறார். விஜய் சினிமாவைய்ய போலா அட்டையை கதியாய்ய்ய சுழற்றி வந்திருக்கிறார் என்று. முதலில் திராவிடம் பேச்சி எனமற்றி அந்த கும்பல் உங்களய்ய கண்டு அஞ்சுது என்கின்றனர். இது கூடா நாடகம் என்கின்றனர். கிருஸ்துவ முஸல்மான் ஓட்டுக்களை சிந்தம்மா சீதாராம வசூலிக்க போடுகிற டிராமா என்கின்றனர். நீஙகள் ஸ்தாஜிலேஆயென விபூதி பட்டை சினமா அலங்காரம் சாயல் தான் ஸ்டேஜிற்கு உள்ளேய சென்றதும் நீனாலும் பிஸி ஆனந்தும் கவனாமாக பட்டையை அளிப்பதுவும் காணொளி கட்சியில் வந்திருக்கு. இதெல்லாம் என்ன ஜோசப் விஜய் சார்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 13, 2024 20:09

புகையிலைப்பொருட்கள், குட்கா விற்கப்படாத மாநிலங்களே இல்லை ..... அதிமுக ஆட்சியில் அவற்றை கண்ணியமான சட்டசபைக்கே எடுத்து வந்து வம்படி அரசியல் செய்தது திமுக ....... அதைப் பார்க்கும் பொழுது இன்றைய எதிர்க்கட்சிகளின் அரசியல் மிகவும் மென்மையானது ....


தாமரை மலர்கிறது
நவ 13, 2024 20:05

அமித் ஷா இயக்கத்தில் விஜய் பிரமாதமாக தவேக படத்தில் நடித்து வருகிறார். திமுக அணி விரைவில் உடைய போகிறது. எடப்பாடி அல்லது விஜய் யார் முதல்வராக வந்தாலும், அமித் ஷா கையில் தான் அவரின் குடுமி இருக்கும். தமிழகத்தின் தலையெழுத்து விரைவில் மாறும். திராவிட நாற்றம் முடிவுக்கு வரும் தருவாய் மலர்ந்துகொண்டிருக்கிறது.


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 19:19

ஒன்று தெரிகிறது. ஆர் எஸ் எஸ் ஸும் பாஜக வும் எல்லா கட்சிகளையும் வாங்கிடுச்சு போலத்தான் தெரிகிறது. அதிமுக, த வெ க, தேமுதிக, பாமக, நாதக, பாஜக - எல்லாரும் ஒரே குரலில் கூவுவதில் இருந்து தெரிகிறது. இன்று நடந்த நிகழ்வை அரசியல் ஆக்க அவசியம் இல்லவே இல்லை.


V Venkatachalam
நவ 13, 2024 19:38

வைகுண்டன் வசதியாக மறைத்து விட்டு கூவுறது என்னன்னா, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு துண்டு சீட்டு சப்பான் முதல்வர் "அரசியல் பண்ணாம அவியலா பண்ணுவாங்க? " அப்பிடின்னு பேசினாரே..அது மட்டும் இந்த ஊபிஸ் மண்டையில் இல்லை...


sankar
நவ 13, 2024 19:55

இருநூறு ரூபாய்க்கு இவ்ளோவா


hari
நவ 13, 2024 23:19

பாஜக பக்கம் மக்கள்....தெரியுமா 200 ரூபாய் வைகுண்டம்


mindum vasantham
நவ 13, 2024 19:17

ஆளட்டும் ஒரு பூர்வ குடி வீரன்


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 19:15

என்ன சொல்கிறார்கள்? பாதுகாப்பு வேண்டும் என்றால்?? எல்லா மருத்துவமனை வாசலிலும் மெட்டல் டிடக்டர் வெச்சு போலீஸ் போடணுமா? மருத்துவமனைக்கு வரும் எல்லாரையும் ஸ்கேன் செய்யணுமா? யாருக்கும் பாதுகாப்பு இல்லையாம். தமிழ் நாட்டில் எத்தனை அரசு மருத்துவ மனைகள், எத்தனை அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. எத்தனை இடங்களில் வருகிறவனை எல்லாம் கத்தி இருக்கா ன்னு செக் பண்ண வேண்டுமா? இந்த சோக அதிர்ச்சி நிகழ்வில் குற்றவாளி டாக்டர் கிட்ட போய், தனது தாயாருக்கு ஏதோ ஓர் தனியார் மருத்துவ மனையில் கொஞ்ச நாட்கள் வைத்திருந்து அப்புறம் இங்கே கொண்டு வந்து, டாக்டரை குத்தினா அரசாங்கம் என்ன பண்ண முடியும்?


sridhar
நவ 13, 2024 22:28

பாவம் , இன்னிக்கி overtime வேலை pol இருக்கு .


புதிய வீடியோ