உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சியை குறைவாக மதிப்பிடவில்லை: செந்தில்பாலாஜி

விஜய் கட்சியை குறைவாக மதிப்பிடவில்லை: செந்தில்பாலாஜி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''என்ன ஓட்டு வங்கி இருக்கிறது என்று தெரியாதபோதிலும், யாரையும் குறைவாக மதிப்பிடவில்லை,'' என, கோவையில் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நடிகர் விஜய் பெயரை குறிப்பிடாமல் கூறினார்.கோவையில் ரூ.9.67 கோடியில் செயற்கை புல்வெளியுடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கப்படுகிறது. இவ்விடத்தை தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்ட பின் கூறியதாவது:ஹாக்கி மைதானம் பணிகள், 2025 ஏப்ரலில் முடிக்கப்படும். ரூ.935 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணி நடக்கிறது. விரைந்து முடிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ரோடு போடுவதற்காக, 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாலைக்கான பட்டியல் தயாரித்து, அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று, விரைவில் அப்பணிகள் துவக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தும் பகுதியில் ரோடு போடவில்லை; அத்திட்ட பணி முடிந்ததும் ரோடு போடப்படும்.திட்டங்களை புறநகர் பகுதிக்கு கொண்டு சென்றால், வசதி குறைவாக இருக்குமென பொதுமக்கள் நினைக்கின்றனர்; அவர்களது வசதிக்காக நகர்ப்பகுதியில் அமைக்கப்படுகிறது; சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும். மின்சாரத்துறை சார்பில் கொள்முதல் செய்யப்படும் அனைத்து உபகரணங்களும் 'ஆன்லைன்' முறையில் டெண்டர் விடப்படுகிறது. கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறையே பின்பற்றப்படுகிறது. தவறு நடைபெறவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளிக்கையில், ''நான் யாரையும் குறைவாக மதிப்பிடவில்லை; யாரையும் குறைவாக சொல்லவில்லை ,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

bgm
நவ 21, 2024 10:08

சொல்லிதான் பாருங்க...ஏற்கனவே வெட்டி உதார் விட்டு 1 வருடமா களி ...அப்றம் நெஞ்சு வலி டிராமா, பெயில்...மறுபடியுமா . வாணம் டா சாமி


Mani . V
நவ 21, 2024 05:44

வெகுவிரைவில் ஆறு கட்சி அமாவாசை என்று அழைக்கப்பட வாய்ப்பிருக்கிறது.


Kasimani Baskaran
நவ 21, 2024 05:37

சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பை பூதான் சர்க்கரை என்றால் கேட்டுக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உடன் பிறப்புக்கள். எப்படி இருந்த திராவிடம் இப்படி கோர்ட் கேஸ் என்றாகி விட்டது...


புதிய வீடியோ